என்னை பிளாக் மெயில் செய்ய முடியாது... பாதுகாப்புத் துறை அமைச்சருடன் கட்டி புரண்ட பிரதமர் இம்ரான்.. பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 4:59 PM IST
Highlights

அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அவரிடம் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்த கேள்வியை முன் வைத்தனர். ஆனால் அவர் பதில் சொல்ல மறுத்தார், இந்த சந்திப்பில் பிரதமருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் வாட்ஸ்அப்பில் வைரலானது. அதைத்தொடர்ந்து ஊடகவியலாளர்  பாதுகாப்புத்துறை அமைச்சர் பார்வேஷை அணுகி கேள்வி முன்வைத்தனர். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளை விமர்சித்த அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரிடம்" என்னை ப்ளாக்மெயில் செய்யாதீர்கள்"  என இம்ரான் கூறியுள்ளார். அதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் " எங்களால் தான் நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள் என பதில் அளித்திருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆகிவிட்டால் பாகிஸ்தானை அவர் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுவார்... நாட்டின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலுமாக ஒழியப் போகிறது என அவரை ஒரு மீட்பரை போல பாகிஸ்தான் ஊடகங்கள், மற்றும் அவரது கட்சியினர் கட்டமைத்தனர். தற்போது அந்த பிம்பம் மெல்ல மெல்ல சிதைய தொடங்கியுள்ளது. சாமானிய குடிமகன் முதல் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வரை இப்போது இம்ரான்கானின் திறமையை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டில் உணவுப் பொருட்களின் விலை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் பெரும் கொந்தளிப்பு இருந்து வருகின்றனர். விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என்று பாகிஸ்தான் மக்கள் தலையில் இடி மேல் இடி விழுந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசுப் பணியில் உள்ளவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளை பாகிஸ்தான் அரசு உணர மறுக்கிறது என முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

நாட்டின் இந்த மோசமான வீழ்ச்சியை சரி செய்ய முடியாமல் இம்ரான்கான் திணறி வருகிறார். பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போதைய அவரது அமைச்சரவை அமைச்சர்களே அவரை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். வியாழக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தின்போது இம்ரான்கானுக்கு அவரது பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனது தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்க இம்ரான்கான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சர் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு இம்ரான்கான் எனக்கு மாற்றாக நீங்கள் வேறு ஒரு வசீர்-இ-அகமதுவை தேர்வு செய்து கொள்ளுங்கள் என காட்டமாக பதில் அளித்துள்ளார் அதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அளித்த பதில் என காரசார மோதல் நடந்துள்ளது.

அதாவது இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ -இன்சாப்  கட்சியின் சார்பில் அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை அன்று நடந்தது. அப்போது பாகிஸ்தானில் மினி பட்ஜெட்டை நிறைவேற்றுவது குறித்து  விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் நடந்ததோ வேறு, கூட்டம் தொடங்கியவுடன் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஷ் கட்டர் எழுந்து பிரதமர் இம்ரான்கானிடம் எனது மாநிலமான கைபர் பக்துன்க்வா வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. அதனால் தான் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ -இன்சாப்  கட்சி படுதோல்வி அடைந்தது  என குற்றம்சாட்டினார். அப்போது ஆத்திரமடைந்த இம்ரான் கான் தன்னைவிட சீனியரான பாதுகாப்பு துறை அமைச்சரின் பேச்சுக்கு,  என்மீது இதே புகார் இருந்தால், வேறு வசீர்-இ- அகமதுவை தேர்ந்தெடுங்கள். நீங்கள் என்னை பிளாக்மெயில் செய்ய முடியாது என்றார். அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், நீங்கள் எங்களால் தான் பிரதமராக முடிந்தது என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறினார். அவ்வாறு கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வேகவேகமாக அவர் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அவரிடம் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்த கேள்வியை முன் வைத்தனர். ஆனால் அவர் பதில் சொல்ல மறுத்தார், இந்த சந்திப்பில் பிரதமருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் வாட்ஸ்அப்பில் வைரலானது. அதைத்தொடர்ந்து ஊடகவியலாளர்  பாதுகாப்புத்துறை அமைச்சர் பார்வேஷை அணுகி கேள்வி முன்வைத்தனர்.  " எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது அதனால்தான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன் ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பதை எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார். 

கைபர் பக்துன்க்வா இம்ரானின் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. பர்வேஸ் கட்டக் இங்கே ஒரு வலுவான தலைவர் ஆவர். ஆனால் அங்கே சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ -இன்சாப் (இம்ரான்கான் கட்சி) படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து மாநிலத்தின் கட்சி பிரிவை இம்ரான்கான் டிஸ்மிஸ் செய்தார். அதிக பணவீக்கம், மின்சார தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடும் ஊழல், உள்ளிட்டவை தோல்விக்கு முக்கிய காரணம் என்று மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.

எப்படி இருந்தாலும் மோசமான செயல் திறன் காரணமாக இம்ரான் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர் அல்லது வெளியேற தயாராகி வருகின்றனர். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் நாடு திரும்ப உள்ளதாகவும், ராணுவத்துடன் அவருக்கு ஒப்பந்தம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த எல்லா விஷயங்கலாளும் இம்ரான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

 

click me!