இந்தியாவைவிட நாங்கதான் ஸ்ட்ராங்... கொக்கரிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!

Published : Jan 12, 2022, 04:56 PM IST
இந்தியாவைவிட நாங்கதான் ஸ்ட்ராங்... கொக்கரிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!

சுருக்கம்

மற்ற நாடுகளை விட குறிப்பாக இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவருவதாக அந்நாட்டு எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். பிரதமர் இம்ரான் கான் அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த வர்த்தக மற்றும் தொழில் துறை உச்சி மாநாட்டில் இம்ரான் கான் பேசுகையில், ‘ பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது. எனது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளை விட குறிப்பாக இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.

உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பொருட்களின் விலை இன்னும் மலிவாக உள்ளது. மற்ற நாடுகளை விட பாகிஸ்தானில் இன்னும் எண்ணை விலை குறைவாகவே உள்ளது. எதிர்க் கட்சிகள் எங்களை திறமையற்றவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எங்களது அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் நாட்டை காப்பாற்றுகிறது.

எனது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளை விட குறிப்பாக இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!