#Breaking: Abu Dhabi tanker explosion:அபிதாபி விமானநிலையத்தில் தீவிரவாத தாக்குதல்.. டிரோன் மூலம் தாக்குதல்..

By Thanalakshmi VFirst Published Jan 17, 2022, 4:06 PM IST
Highlights

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபிதாபி விமான நிலையம் அருகே டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபிதாபி விமான நிலையம் அருகே டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  டிரோன் தாக்குதலில் விமானநிலையத்தில் இருந்த 3 எரிப்பொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பகுதியில் டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அபிதாபி டிரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

அபுதாபியில் மூன்று எண்ணெய் டேங்கர்களில் ட்ரோன்கள் வெடித்திருக்கலாம் மற்றும் அபுதாபியின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக கட்டுப்பட்டு வரும் கட்டுமான இடத்தில் நடந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறியுள்ளது. அபுதாபியின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்கு அருகே மூன்று பெட்ரோலியம் டேங்கர்களில் தனித்தனியாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ட்ரோன்களுக்கு சொந்தமான சிறிய பறக்கும் பொருட்கள் இரு பகுதிகளில் விழுந்து வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வெடிக்குண்டு தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதற்கு போறுப்பேற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போரில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஏமனின் தலைநகரைக் கைப்பற்றி அங்குள்ள சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்தை வெளியேற்றியது. பின்னர் ஈரானிய ஆதரவு ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டணியின் முக்கிய உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!