ஐநாவையே அதிர வைத்த இந்தியா..!! கொரோனா நேரத்தில் இப்படி ஒரு சம்பவம்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 8, 2020, 11:58 AM IST

இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணத்  தொகையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் . 
 


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்த விவகாரம் குறித்து  முழுயான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் விரும்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார் ,இந்த மோசமான சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் ,  நேற்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் திடீரென ஏற்பட்ட விஷவாயு கசிவால்  இதுவரை  11 பேர் உயிரிழந்துள்ளனர் ,அதாவது விசாகப்பட்டினம் கோபாலபட்டினம் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்ற ரசாயன தொழிற்சாலையில் இருந்து நேற்று அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது ,  இதில் அப்பகுதியில் குடியிருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆட்பட்டனர் . 

Latest Videos

இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து ஓட முயன்று ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர் .   இந்த மோசமான நச்சு காற்றை  சுவாசித்ததில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை 11 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் . சுமார் 20க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர் ,  இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ,  அதாவது  மக்கள் நெரிசல் அதிகம் மிக்க பகுதிக்கு மத்தியிலுள்ள உள்ள இந்த ஆலை போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி செயல்பட்டு  வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணத்  தொகையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் . 

இந்த கோர விபத்து சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,  ஏற்கனவே கொரோனாவில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில் தற்போது விஷவாயு விபத்து ஆந்திர மாநிலத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஐநா மன்றத்தின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குடரெஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ,  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள விஷவாயு விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என்பதே ஐநா பொதுச் செயலாளரின் விருப்பம், அதே போல் உள்ளூர் அதிகாரிகள் இந்த விசாரணையை உடனே தீவிரப்படுத்த வேண்டும் என   விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  ஐநாவின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்,

விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் ஐநா பொதுச் செயலாளர் குடரெஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் 1984ம் ஆண்டு போபாலில் நடந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி ஆலையில் ஐசோசயனைட் விஷவாயு சம்பவத்தை நினைவு படுத்துவதாக தெரிவித்துள்ளனர், போபால் விபத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

click me!