உலக அளவில் 70 லட்சம் பெண்கள் தேவையில்லாத கர்ப்பம்..!! ஊரடங்கு நேரத்தில் தீவிரமாக வேலை பார்த்த காளையர்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 30, 2020, 5:45 PM IST

உலக அளவில் 114 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார்  40.5 கோடி பெண்கள் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துகின்றனர்  என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது 


கொரோனா வைரஸ்  காரணமாக உலக அளவில் கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தடை பட்டுள்ளதால் உலகம் முழுவதும் அவசியமில்லாமல் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐநா மக்கள் நிதியம் மற்றும்  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன .  இதன் காரணமாக வரும் மாதங்களில் உலகம் முழுவதும் திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளதாக ஐநா மக்கள் நிதி மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .  இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் நடாலியா கனெம் கூறியுள்ளதாவது ,  ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பது தடைபட்டுள்ளது. 

Latest Videos

இதன் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  ஒரிரு மாதங்களில் தேவையில்லாமல் உலகம் முழுவதும் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல் நிலவுகிறது ,  பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடியாத நிலை தொடர்கிறது இதனால்  திட்டமிடப்படாத கர்பத்தால் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதேநேரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இதர வன்கொடுமைகளும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கால் உலக அளவில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள்  அதிகரிக்கும் என புதிய தரவுகள் குறிப்பிடுகின்றன.நோய்த் தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்காக திட்டமிடும் திறன் மற்றும் தங்களது உடல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பை இழக்க நேரிடும் , 

கொரோனாவால்  ஏற்படும் பொருளாதார மற்றும் உடல் ரீதியான இடையூறுகளானது பெண்கள் மற்றும் சிறுமிகள் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்துக்கு பெரும்  அச்சுறுத்தலை விளைவிக்கும் .  உலக அளவில் 114 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 40.5 கோடி பெண்கள் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துகின்றனர்  என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது .  தற்போது 6 மாத காலத்திற்கான குறிப்பிடத்தக்க அளவு ஊரடங்கு காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை களை பயன்படுத்த முடியாமல் போகக்கூடும் ,  இதன் விளைவாக உலக அளவில் கூடுதலாக 70 லட்சம் பெண்கள் திட்டமிடாத கர்ப்பம் அடைய வழிவகுக்கும்.  மேலும் இந்த ஊரடங்கினால் பாலின  அடிப்படையிலான வன்முறையானது 3.7 கோடி அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது . 
 

click me!