சீனாவை வீழ்த்த இந்தியாவிடம் சரண்டரான அமெரிக்கா..!! அடிக்கடி போன் செய்து உறவாடும் மைக் பாம்பியோ..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2020, 4:11 PM IST
Highlights

இழந்த பொருளாதாரத்தை எப்படி மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது அதற்கு  நாடுகளிடையே ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்வது ,  
 

உலக அளவில் மருத்துவ பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார் ,  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை  சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . உலகள அளவில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது .  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை கொரோனா வைரஸ்  மிக மோசமாக பாதித்துள்ளது . 

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த பாதிப்புக்கும்  சீனாதான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் ,  இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப்போர் நிகழ்ந்து வருகிறது.  இந்நிலையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு பேருதவி செய்துள்ளது ,  சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் ஆசிய நாடுகளில் அனைத்து துறைகளிலும்  சீனாவுக்கு இணையாக உள்ள இந்தியாவுடன் அமெரிக்கா நட்பு பாராட்ட தொடங்கியுள்ளது .  இதன் வெளிப்பாடாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் . 

அதாவது ஊரடங்குக்குப் பின்னர் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பாக ஆஸ்திரேலியா இந்தியா ஜப்பான் நியூசிலாந்து தென் கொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை ஒன்றாக இணைத்து புதிய கூட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது .  இந்நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ,  ஆஸ்திரேலியா ,  இந்தியா உள்ளிட்ட தனது நண்பர்களுடன் அமெரிக்கா  அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து  ஆலோசனை நடத்தி வருகிறது ,   இழந்த பொருளாதாரத்தை எப்படி மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது அதற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்வது ,

 

மீண்டும் இதுபோன்ற பாதிப்புகள்  நிகழாமல் தடுப்பது எப்படி என்பது குறித்தும் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில்  மருந்து பொருட்களின் தங்கு தடையற்ற விநியோகம் குறித்தும்  ஆலோசித்து வருகிறோம் .  இந்நிலையில் அமெரிக்காவுக்கு  இந்தியா சிறந்த நண்பனாக இருக்கிறது என தெரிவித்துள்ள மைக் பாம்பியோ ,  கடந்த சில வாரங்களில் மட்டும் குறைந்தது நான்கு முறை இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!