வீட்டுக்குள் நடந்த முக்கிய டியூட்டி... ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் புதிதாக 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 30, 2020, 01:19 PM IST
வீட்டுக்குள் நடந்த முக்கிய டியூட்டி... ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் புதிதாக 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்..!

சுருக்கம்

கடந்த 6 மாதங்களில் 3 கோடியே 10 லட்சம் குடும்ப வன்முறைகள் நடைபெறக்கூடும் என்றும், 70 லட்சம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பம் அடைய வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மாதக்கணக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், போக்குவரத்து, உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இதையும் படிங்க: “இதயமே உடைந்து விட்டது”... நண்பர் ரிஷி கபூரை இழந்து துடி துடிக்கும் ரஜினி, கமல்...!

இந்நிலையில் ஊரடங்கால் கருத்தடை சாதனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் கர்ப்பம் அடைந்துள்ள பெண்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் கர்ப்பம் அதிகரிப்பதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் காண்டம், கருத்தடை மாத்திரைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 4.7 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம். தற்போதைய சூழ்நிலையில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. அப்படி ஆணும், பெண்ணும் ஒரே வீட்டிற்குள் அதிக நேரத்தை செலவிடுவதால் கணவன், மனைவிக்கு இடையேயான சண்டை மற்றும் வன்முறைகள் அதிகமாகி வருகின்றன. 

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

கடந்த 6 மாதங்களில் 3 கோடியே 10 லட்சம் குடும்ப வன்முறைகள் நடைபெறக்கூடும் என்றும், 70 லட்சம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பம் அடைய வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 114 நாடுகளைச் சேர்ந்த 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி வந்தாலும், தட்டுப்பாடு காரணமாக 4 கோடியே 70 லட்சம் பேருக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு