சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் அமெரிக்க துருப்புகளை களமிறங்கியுள்ளார். அதில் ஒன்றுதான் பல ஆண்டுகளாக சீனாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் உள்ள தைவானை ஆதரிக்கும் யுக்தி...
உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா வைரசை எதிர்த்து தைவான் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில் , உலக சுகாதார அமைப்பு நிகழ்வுகளில் பங்கேற்க முதன் முறையாக அந்நாட்டிற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து சீனா தன் காலனி நாடு என கூறி வரும் தைவானை அமெரிக்கா ஆதரிக்கத் தொடங்கியுள்ளது . இது சீனாவுக்கு எதிராக தைவானை கொம்பு சீவும் முயற்ச்சி என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர் .கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரசால் அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த உலகம் இந்த அளவுக்கு மோசமான பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் சீனா தான் , இந்த வைரசை தெரிந்தோ தெரியாமலோ பரப்பியது சீனாதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.
அமெரிக்க ராணுவத்தினரால்தான் இந்த வைரஸ் முதல் முதலில் சீனாவில் பரப்பப்பட்டிருக்கக் கூடும் என சீனா எதிர் குற்றம்சாட்டை முன் வைக்கிறது . இந்நிலையில் அமெரிக்கா சீனா இடையே கொரோனா மோதல் தீவிரமாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் சீனா ஆரம்ப காலத்திலேயே இந்த வைரஸை உலக நாடுகளுக்கு எச்சரித்திருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள இப் பேரழிவிலிருந்து உலகம் தப்பித்திருக்கும் என அமெரிக்க அதிபர் புலம்பி வருகிறார் . அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனமும் இந்த வைரஸ் குறித்து முன்கூட்டியே உலகிற்கு எச்சரிக்க தவறிவிட்டது . சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு வைரஸ் தகவலை இது மறைத்துவிட்டது என WHO மீது கோபக்கணைகளை வீசி வருகிறார் ட்ரம்ப் . ஆனால் இதற்கிடையில் சீனாவை பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் சீனா இந்த வைரஸை ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. அதனால்தான் இந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நாடுகளும் செயல்பட வேண்டுமென அதானோம் மற்ற நாடுகளுக்கு அட்வைஸ் செய்தார்.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டிராம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளார். இதற்கிடையில் சீனா குறித்து தீவிரமாக விசாரனை நடத்தப்படும் எனவும் தெரிவித்து வந்த அவர், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் அமெரிக்க துருப்புகளை களமிறங்கியுள்ளார். அதில் ஒன்றுதான் பல ஆண்டுகளாக சீனாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் உள்ள தைவானை ஆதரிக்கும் யுக்தி... கொரோனாவை சாமார்த்தியமாக கட்டுப்படுத்திவிட்டோம் பார் என தனக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தும் சீனாவை வெறுப்பெற்றவும், உளவியல் ரீதியாக அதன் மீது தாக்குதல் தொடுக்கவும் முடிவு செய்துள்ள அமெரிக்கா, நீண்ட நாட்களாக சீனாவுக்கு எதிராக கனன்று கொண்டிருக்கும் தைவானை இப்போது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. பல ஆண்டுகளாக தைய்வானை தன்னுடைய காலனி நாடு என்றும் அதை பல விஷயங்களில் சுயமாக செயல்பட விடாமலும் சீனா தடுத்து வரும் நிலையில் தைவானை இப்போது அமெரிக்கா ஆதரிக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் தைவான் சுகாதார துறை அமைச்சரை தொலைபேசியில் அழைத்துள்ள அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவை செயலாளர் அலெக்ஸ் அசார் .
உலக சுகாதார அமைப்பு நிகழ்வுகளில் பங்கேற்க தைவானை அமெரிக்கா ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றியும் உலகளாவிய மற்ற சுகாதார பிரச்சினைகளை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்தும் விவாதிக்க இனி தைவான் முன்வரவேண்டும் , அதற்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என அமெரிக்காவின் ஆதரவை அவர் தெரிவித்துள்ளார் . தைவான் தனது நிபுணத்துவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதாவது சீனா தொடர்ந்து தைவானுக்கு எதிராகவும் அதன் இறையாண்மையை அங்கிகரிக்கவும் மறுத்து வருவதுடன், உலக சுகாதார நிறுவனத்தில் அந்நாடு பங்கேற்கவும் பெரும் தடையாக இருந்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்கா தைவானுக்கு தனது ஏகோபித்த ஆதரவை அளிக்க முன்வந்திருப்பது சீனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் நிச்சயம் இது ஒரு மோதலுக்கு வழி வகுக்கக் கூடும் என தெரிகிறது. அதாவது அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையேயான இந்த ஒத்துழைப்பு தைவானின் சர்வதேச அந்தஸ்தை மேம்படுத்த உதவும் அதே நேரத்தில் சீனாவை கோபப்படுத்தும் நடவடிக்கை என ஆசியா-பசிபிக் எலைட் இன்டர்சேஞ்ச் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் ஆர்தர் வாங் ஜின்-ஷெங் கூறியுள்ளார்.