போரிஸ் ஜான்சன், சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமன்ஸ் ஆகியோருக்கு இன்று காலை லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதனால் போரிஸ் ஜான்சன், சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களாக கடுமையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். கற்பமாக இருந்த தன் மனைவியை பிரிந்திருந்த அவர் டவுனிங் வீதியில் உள்ள அரசு இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார், இந் நிலையில் திடீரென மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் கொடுத்த சிறப்பான சிகிச்சை மூலம் அவர் வைரசில் இருந்து குணமடைந்து திரும்பினார் .
இதற்கிடையில் அவரது எதிர்கால மனைவி கேரி கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று காலை லண்டனில் உள்ள என்எச்எஸ் மருத்துவமனையில் அவர் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் . இதுகுறித்து தெரிவித்துள்ள போரிஸ் தம்பதியர் லண்டன் மருத்துமனையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை தங்களுக்கு பிறந்திருக்கிறது கோடையின் வரவாக பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர். இன்று காலை லண்டன் மருத்துவமனையில் பிறந்த குழந்தை மற்றும் அவரது தாய் இருவரும் நன்றாக இருக்கின்றனர் இந்த தகவலை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பிரமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகப்பேரு மருத்துவம் பார்த்த மருத்துவ குழுவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் அவருக்கு நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது 32 வயதான கேரி கன்சர்வேட்டிவ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவராக பணியாற்றினார் , ஆனால் இப்போது அவர் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆர்வலராக இருந்து வருகிறார். திருமணமாகி 25 வருடங்கள் கழித்து மனைவியை விவாகரத்து செய்த நிலையில் கேரீயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் போரிஸ். இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் தற்போது பிறந்த குழந்தை என்எச்எஸ் மருத்துவமனையில் 10 ஆம் எண் அறையில் பிறந்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த இங்கிலாந்து பிரதமர்களின் குழந்தைகளும் இதே எண் கொண்ட அறையில்தான் பிறந்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு டேவிட் கேமரூன் மனைவி சமந்தா தன் மகள் புளோரன்ஸை இங்குதான் பெற்றெடுத்தார் , மற்றும் 2000 மாவது ஆண்டு டோனி பிளேயர் மனைவி செரி தனது நான்காவது குழந்தை லியோவை இங்கு பெற்றெடுத்தார் .
ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். தனது இரண்டாவது மனைவியான பாரிஸ்டர் மெரினா வீலருடன் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், லாரா லெட்டிஸ், 26, மிலோ ஆர்தர், 24, காசியா பீச், 22, மற்றும் தியோடர் அப்பல்லோ, 20.என்பவர்களே அவர்கள், திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு போரிஸ் மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிட தக்கது.