சீனாவின் சின்னத்தனமான புத்தியை சந்திசிரிக்க வைத்த கேம்.. செம கடுப்பான சீனாவின் அதிரடி ரியாக்‌ஷன்

By karthikeyan V  |  First Published Apr 29, 2020, 4:37 PM IST

கொரோனா உலகம் முழுதும் பரவியதற்கு சீனாவை குற்றம்சாட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டு, பிரபலமடைந்த கேம் ஒன்றை சீனா தடை செய்துள்ளது.
 


சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸால், சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடும் இழப்புகளை சந்தித்துள்ளன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

Latest Videos

உலகம் முழுதும் உயிரிழப்புகளை மட்டுமல்லாது கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் உருவாகி பரவிய விதத்தில் உலக நாடுகளுக்கு பெரும் சந்தேகம் இருக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே சீனாவிற்குள்ளே கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தியதற்கு சீனாவின் அலட்சியம் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகிறார். அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை குற்றம்சாட்டிவருகின்றன. 

இந்நிலையில், கொரோனா வைரஸை அடிப்படையாக வைத்து சீனாவின் அலட்சியத்தை அம்பலப்படுத்தும் விதமான கேம் ஒன்றை செம கடுப்பாகி தடை விதித்துள்ளது சீனா. கொரோனா வைரஸை அடிப்படையாக கொண்ட அந்த கேமில், சீனாவின் கொடி பயன்படுத்தப்படுகிறது. 

சிவப்பு பின்னணியில் ஸ்டார்களை கொண்டிருக்கும் சீனாவின் தேசிய கொடி. அந்த கேமில் அதேமாதிரியான சிவப்பு பின்னணி தான். ஆனால் ஸ்டார்களுக்கு பதிலாக கொரோனா வைரஸின் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த கேமில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட Zombie-க்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை அந்த கேம் விளையாடும் பிளேயர்ஸ் தடுக்க வேண்டும். 

கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் Zombie-க்களை தப்பிக்கவிடாமல் பிளேயர்கள் தடுக்க வேண்டும் என்பதுதான் அந்த கேம். சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வெளிநாடுகளுக்கு பரவிய நிலையில், இந்த கேம், சீனாவின் முகத்திரையை கிழிக்கும் விதமாக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், ”சுதந்திர ஹாங் காங்” மற்றும் “தைவான் சீனாவுடையது அல்ல” ஆகிய அடையாளக்குறிகளை, இந்த கேமை ஆடும் பிளேயர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 

சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாக இருக்கும் ஹாங்காங், அதேபோல சர்ச்சைக்குரிய தைவான் ஆகிய பகுதிகளும் சீனாவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்பதை பறைசாற்றும் விதமான குறியீடுகளும் இந்த கேமில் இடம்பெற்றிருந்தன. கொரோனா பரவலுக்கு சீனாவை சாடியது மட்டுமல்லாமல், சீனாவின் உள்நாட்டு அரசியலையும் சந்திசிரிக்க செய்த இந்த கேமிற்கு சீனா தடைவிதித்துள்ளது.

click me!