வல்லுனர்களின் எச்சரிக்கையை மதிக்காத உலக நாடுகள்..!! தலையில் அடித்து கதறும் WHO இயக்குனர் டெட்ரோஸ் அதானோம்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 29, 2020, 2:11 PM IST
Highlights

அதே நேரத்தில் மற்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு சுமார்  21 நாடுகளில் தட்டுப்பாடு என செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
 

கொரோனா வைரஸ் பெரும் தொற்று இன்னும் ஓயவில்லை இந்நிலையில் சர்வதேச அளவில் குழந்தைகளை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின்  இயக்குனர் ஜெனரல் டெட் ரோஸ் அதானோம் ஆதங்கம் தெரிவித்துள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலக அளவில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டி உள்ளது .  இந்நிலையில் இன்னும் பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது.  குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் அமெரிக்கா பிரிட்டன் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் வைரஸ் தொற்று மேலும் தொடர வாய்ப்பிருக்கிறது என உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின்  இயக்குனர் ஜெனரல் டெட் ரோஸ் அதானோம்,  அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் கொரோனா வைரஸ்  தீவிரமாக இருந்ததுபோல  இப்போதே ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் கொரோனா காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக அங்குள்ள குழந்தைகளை நினைத்தால் கவலை அளிப்பதாக உள்ளது.  என தெரிவித்துள்ளார் .  மேலும் அவர் கூறுகையில் நமக்கு முன்னால் நீண்ட தொலைவான பாதை தெரிகிறது ,  இன்னும்  நாம் நிறைய துரத்தை கடக்க வேண்டி உள்ளது.   இன்னும் கூட கொரோனா தாக்கம் ஓயவில்லை  இதை முறியடிப்பது மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது  அதற்குகள் பல உலக நாடுகள் தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த  கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றனர் இது நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் மற்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு சுமார்  21 நாடுகளில் தட்டுப்பாடு என செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

குறிப்பாக போலியோ , அம்மை , காலரா ,  மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் பல ஏழை எளிய நாடுகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உலக அளவில் சுமார் 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதற்கு காரணம் கொரோனாவால் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதே ஆகும்,  துணை சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா காய்ச்சல் நோய்கள் இரட்டிப்பாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது .  ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் சேர்ந்து அந்த மோசமான நிலை உருவாகி விடாமல் தடுக்க பாடுபட்டு வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார் .  கொரோனா பரவி வரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வரும் நிலையில் ,  உலக சுகாதார  அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என பேரிடர் கால அவசர குழு நிபுணர்  டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.  

 

click me!