வேண்டாம் வேண்டாம் என கதறிய உலக சுகாதார நிறுவனம்..!! கேட்காமல் போய் பள்ளத்தில் விழுந்த ஜெர்மனி..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 30, 2020, 4:59 PM IST

ஆனால் அதையெல்லாம் மீறி ஜெர்மனி ஊரடங்கை தளர்த்திய நிலையில் ,  அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது .


ஜெர்மனி அவசரகதியில் ஊரடங்கை தளர்த்தியதன் எதிரொலியாக மீண்டும் அங்கு கொரோனா  வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது, இது ஜெர்மனியை மட்டுமல்லாது ஊடரங்கு தளர்த்த முன்வந்துள்ள நாடுகள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் கொரோனா தன் கொடூர கருத்தை பரப்பி உள்ள நிலையில் ,  உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரையில உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது ,  இத்தாலி அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் ரஷ்யா துருக்கி உள்ளிட்ட  நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Latest Videos

அங்கு மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆளாகியுள்ளனர்,  இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கடந்த வாரம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் , அந்நாடு ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது இது குறித்து தெரிவித்த அந்நாட்டின் சுகாதாரத்துறை ,  பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துவருவதால் ஊரடங்கை தளர்த்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை எனவே தொழிற்சாலைகள் இயங்க முன்வரவேண்டும் அதுமட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அங்கு முறையான சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவித்தது . ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து  பல தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின,  மக்கள் வழக்கம் போல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் . 

கொரோனா வைரசிலிருந்து நாடு விடுபட்டு விட்டது என எண்ணி அங்கங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதினர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும்  மேலாக புதிய வைரஸ் தொற்றுக்கள் நாட்டில் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது ,  இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார்  1478 பேருக்கு புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது ,  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நாடு மீண்டும் ஊரடங்கை அமல் படுத்த திட்டமிட்டு வருகிறது.  ஜெர்மனியில் ஊரடங்கு தளர்வு என அறிவிக்கப்பட்டபோது உலக சுகாதார நிறுவனம் மிக கடுமையாக எச்சரித்தது ஊரடங்கு தளர்த்தும் விவகாரத்தில் எந்த நாடுகளும் அவசரப்பட்டு கூடாது என கேட்டுக்கொண்டது,  இன்னும் கொரோனா  வைரஸ் முடிவடையவில்லை அது இனிமேல்தான் தீவிரம் காட்டத் தொடங்கும் என எச்சரித்திருந்தது ,  ஆனால் அதையெல்லாம் மீறி ஜெர்மனி ஊரடங்கை தளர்த்திய நிலையில் ,  அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது . 

இதனால் மக்களின் உயிருடன் அரசு விளையாடுவதை  நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலுவான காரணங்கள் இல்லாமல் ஊடரங்கை அரசு தளர்த்தியது மிகப் பெரிய தவறு  எனவும் பல்வேறு தரப்பினரும் அரசை குற்றம்சாட்டுகின்றனர் .  இந்நிலையில் ஜெர்மனியில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6467 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!