தீவிரவாதி மசூத் அசார் மீதான தடை ஐ.நா.வில் நிறுத்திவைப்பு - இந்தியாவின் முயற்சிக்கு 2-வது முறையாக சீனா முட்டுக்கட்டை

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 02:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
தீவிரவாதி மசூத் அசார் மீதான தடை ஐ.நா.வில் நிறுத்திவைப்பு - இந்தியாவின் முயற்சிக்கு 2-வது முறையாக சீனா முட்டுக்கட்டை

சுருக்கம்

ஜெயிஷ்  இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச அளவில் தீவிரவாதியாக அறிவிக்க கோரும் இந்தியாவின் 2-வது முயற்சிக்கு இந்த முறையும் சீனா முட்டுக்கட்டை போட்டது.

இந்தியாவின் விண்ணப்பத்தில் எங்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருப்பதால், அது குறித்து ஆலோசிக்க வேண்டும் என சீனா கோரியதையடுத்து மசூத் அசாருக்கு விதிகப்பட இருந்த தடை  நிறுத்தி வைக்கப்பட்டது.

கடிதம்

 கடந்த ஜனவரி 2-ம் தேதி  பதான் கோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலுக்குபின், அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கக் கோரி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதத்தையும், ஆதாரங்களையும் அனுப்பி இருந்தது.

நிறுத்தம்

மசூத் அசாருக்கு தடைவிதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்க ஐ.நா. ஆயத்தமானது. இந்த சூழலில் இந்த விவகாரத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா குழுவிடம் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா கேட்டுக் கொண்டது. இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா நிறுத்தி வைக்கப்பட்டது.

வீட்டோ அதிகாரம்

இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஐ.நா. கூட்டத்தில் மசூத் அசார் மீதான தடை கொண்டு வர கடந்த வாரம் இந்தியா சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 14 நாடுகள் சம்மதம் தெரிவித்த நிலையில், வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா இந்த முறையும் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.

ஆலோசனை

அது குறித்து சீனா வெளியிட்ட அறிக்கையில், “ மசூத் அசாருக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும், சொத்துக்களை முடக்கி, வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் என இந்தியா விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பம் தொடர்பாக எங்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருப்பதால், இது குறித்து தொழில்நுட்ப ரீதியாக , இது தொடர்புடைய நாடுகளுடன், விரிவாக ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது. அதற்கு சிறிது காலம் அவகாசம் தேவைப்படும்'' தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடைசி நேரத்தில் மசூத் அசார் மீதான தடை கொண்டு வரும் விவகாரத்துக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

ஏற்கெனவே மும்பை தாக்குதல் தொடர்பாக லக்விக்கு தடை விதிக்கும்படி இந்தியா கோரிய போதும் பாகிஸ்தான் சார்பில் சீனா தடை செய்தது. தற்போது 2-வது முறையும் சீனா முட்டுக்கட்டைபோட்டிருப்பது இந்தியாவை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

பிரிக்ஸ் மாநாடு

இந்நிலையில், இம்மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் கோவா மாநிலத்தில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு நடக்கிறது. அங்கு வரும் சீனா பிரதமர் ஜி ஜின்பிங்குடன் இது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

இது குறித்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து விதமான தீவிரவாதத்தையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்பும் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் சீனா அளிக்கும்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!