அந்தோனியோ குத்ரோஸ்….ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்

 
Published : Dec 13, 2016, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
அந்தோனியோ குத்ரோஸ்….ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்

சுருக்கம்

அந்தோனியோ குத்ரோஸ்….ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்

ஐக்கிய நாடுகள் அவையின்  பொதுச்செயலாளராக தற்போது  பான் கி-மூன் பதவி வகித்து வருகிறார். இவரின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் மொத்தம் 13 வேட்பாளர்கள்  களமிரங்கினர்.அவர்களில் 7 பேர் பெண்கள். இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது.  

இத்தேர்தலில்  போர்ச்சுகல் நாட்டின்  முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுக் கொண்டார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச் செயலாளராக குத்தோரஸிற்கு, பதவிப்பிரமாணம் செய்து வைத்த பான் -கி-மூன்  அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!