
பாகிஸ்தான் விமானம் விபத்துள்ளானதில், அதில் பயணித்த 47 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏடிஆர் பிகே 661 என்ற விமானம் சித்ரால் பகுதியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் ரேடார் சிக்னலில் இருந்து விலகியது.
இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம் அப்போட்டாபாத் நகர் அருகே ஹவேலியன் என்னும் பகுதியில் சென்றபோது திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 47 பேர் இறந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.