Russia Ukraine War: அதிர்ச்சி..! குடியிருப்பு மீது ஏவுகணை தாக்குதல்..பலியான பிரபல உக்ரைன் நடிகை..

By Thanalakshmi V  |  First Published Mar 18, 2022, 3:00 PM IST

Russia UKraine War: உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Russia Ukraine War: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்.,24 ஆம் தேதி போர் தொடுத்தது. மேலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி சுதந்திர நாடுகளாக அறிவித்த ரஷ்யா, அந்த பகுதி மக்களை உக்ரைன் இராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாக கூறி தங்கள் நாட்டு படைகளை உக்ரைனுக்கு அனுப்பி போரை தொடங்கியது.

Tap to resize

Latest Videos

20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போர் தாக்குதலில் இரு தரப்பில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களாக சுமி, கீவ், கார்கீவ், மரியுபோல், கேர்சன் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படை தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. உக்ரைனின் இராணுவ தளம், விமான படை தளம் உள்ளிட்ட இராணு அமைப்புகளை தொடர்ந்து தரை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தி அழித்து வருகிறது ரஷ்யா.

மக்கள் வெளியேற்றம்:

மேலும் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே உக்கிரமடைந்துள்ள போர் காரணமாக,  உக்ரைனிலிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் உடைமைகளோடு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடயே உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யாவும் அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. முக்கியமாக சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஆக கருதப்படுகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும் படி ரஷ்ய மக்களே கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதின் உரை:

இந்நிலையில் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான் போருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு தேச துரோகமாகும் என்று கூறினார். மேலும் நமது நாட்டின் வலிமை, ஒருமைபாடு, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டுமென்றால் துரோகிகளிடமிருந்து நாட்டினை சுத்தப்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.

இதனிடையே கீவ் நகரில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியல், அதில் இருந்த 67 வயதான பழம்பெரும் பிரபல நடிகை ஒக்சான் ஸ்வெட்ஸ் பலியாகியுள்ளார். இவர் உக்ரைனின் உயரிய திரையுலக விருதினை பெற்றுள்ளார்.

மேலும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அறிவிப்பின்படி, உக்ரைனின் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 1000 க்கும்  மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பஞ்சாயத்துக்கு நாங்க கட்டுப்பட முடியாது.. கடுப்பேற்றிய ரஷியா.. பாவம் ஐநா என்ன செய்யுமோ ?

click me!