கீவ் தலைநகருக்கு 'திடீர்' விசிட் அடித்த போரிஸ் ஜான்சன்.. ரஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் அதிபர் !

By Raghupati R  |  First Published Apr 10, 2022, 1:25 PM IST

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது.


உக்ரைன் - ரஷியா போர் :

தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷிய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். 

Tap to resize

Latest Videos

கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் இது தொடர்பான தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, இருவரும் சந்தித்துப் பேசிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இருவரும்  இணைந்து கீவ் நகர வீதிகளில் சென்று மக்களோடு மக்களாக உரையாடி உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கீவ் நகரின் மையப்பகுதியில் மக்களை சந்தித்து உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைனுக்கு உதவி செய்வோம் :

உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும் ! தைரியம் என்றால் இப்படித்தான் இருக்கும்! மக்களுக்கும், நாடுகளுக்கும் இடையிலான உண்மையான நட்புறவு என்றால் இப்படித்தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் பேசிய போரிஸ் ஜான்சன், 'உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரேனிய மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன். ரஷ்யப் படைகள் உக்ரைன் வீரத்துடன் எதிர்கொள்கிறது. பிரிட்டன் அரசு உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்பதை இன்று தெளிவுபடுத்தினேன். பல காலமாகவே எங்கள் நிலைப்பாடு இதுவாகவே இருந்து வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தொடரும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : சைக்கிள் வேணுமா உனக்கு..? சைக்கிள் கேட்ட 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம் !

click me!