இந்த மாதிரி பெயர் இருந்தால் பாஸ்போர்ட் கிடைக்காது! குழந்தைக்கு பேர் வைக்கும்போது இதை யோசிங்க!

By SG Balan  |  First Published Aug 7, 2024, 8:43 PM IST

கலீசி என்ற பெயர் வார்னர் பிரதர்ஸுக்குச் சொந்தமாக இருப்பதால் அவர்களின் அனுமதி தேவை என்று பாஸ்போர்ட் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சிறுமியின் தாய் லூசி தெரிவித்துள்ளார். 


பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' கதாபாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டதால், பிரிட்டனைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது.

புகழ்பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வெப் சீரிஸில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் கலீசி. எமிலியா கிளார்க் இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இதே பெயரைக் கொண்ட கலீசி என்ற 6 வயது பிரிட்டன் சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் வரும் பாத்திரத்தின் கலீசி என்ற பெயரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை பெயராக பதிவுசெய்திருக்கிறது என்பதால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

கலீசி என்ற பெயர் வார்னர் பிரதர்ஸுக்குச் சொந்தமாக இருப்பதால் அவர்களின் அனுமதி தேவை என்று பாஸ்போர்ட் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சிறுமியின் தாய் லூசி தெரிவித்துள்ளார். 

"அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் முதல் முறை விடுமுறை ஒன்றாகச் செலவிட திட்டமிட்டிருந்தோம்" என்று லூசி கூறுகிறார்.

நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!

:பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. மகளின் பெயர் வார்னர் பிரதர்ஸ் மூலம் வர்த்தக முத்திரையாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. இது போன்ற விஷயத்தை நான் இப்போதுதான் முதலில் கேள்விப்படுகிறேன்" என்றும் அவர் சொல்கிறார்.

இது தொடர்பாக லூசியில் வழக்கறிஞர்கள் கூறுகையில், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸின் வர்த்தக முத்திரையாக இருந்தாலும், அது வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கானது, தனிநபரின் பெயருக்கானது அல்ல என்று வாதிடுகிறார்கள். இதுபற்றி பாஸ்போர்ட் அலுவலகத்திற்குக் கடிதம் அனுப்பியபோதும்,  வார்னர் பிரதர்ஸிடமிருந்து இருந்து அனுமதி கடிதம் தேவை என்று பதில் வந்துள்ளது.

விரக்தி அடைந்த லூசி தனது வினோத அனுபவத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதன் எதிரொலியாக, பாஸ்போர்ட் அலுவலகம் லூசியைத் தொடர்புகொண்டு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. தவறான புரிதல் காரணமாக இவ்வாறு நடந்துவிட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பதிவிட்ட பின்னரே இது சாத்தியமானது என்று லூசி ஆசுவாசம் அடைந்தார்.

கதை கூட கேட்காமல் ஓகே சொல்லி ஏமாந்து போயிட்டேன்... குமுறும் பிரபல தமிழ் நடிகை

click me!