கதை கூட கேட்காமல் ஓகே சொல்லி ஏமாந்து போயிட்டேன்... குமுறும் பிரபல தமிழ் நடிகை
சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன், தான் பல நல்ல பட வாய்ப்புகளை மிஸ் பண்ணியதற்கு காரணம் என்ன என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
meera vasudevan
நடிகை மீரா வாசுதேவன் மும்பையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் பிறந்தார். சின்னத்திரை நடிகையாக இருந்த மீரா கோல்மால் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தமிழில் "உன்னை சரணடைந்தேன்" படத்தில் அறிமுகமானார்.
Meera Vasudevan
'அறிவுமணி', 'ஜெர்ரி', 'கத்தி கப்பல்' என அடுத்தடுத்த எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிட்டார். பிறகு பல ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியின் "அடங்கமறு" படத்தில் அண்ணியாக நடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் மீரா வாசுதேவன் பல கசப்பான அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறார். விஷால் அகர்வால், அனிஷ் ஜான் கோகன் இருவரையும் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து ஆனதை அடுத்து, இனி குழந்தையுடன் தனியாகவே இருந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், திடீரென சில மாதங்களுக்கு முன் மீராவுக்கும் ஒளிப்பதிவாளர் விபினும் திருமணம் நடந்தது.
Meera Vasudevan Husband
இப்போது நல்ல குணச்சித்தர பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி தீவிரமாக முயற்சி செய்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் மீரா வாசுதேவன் சினிமாவில் தன்னால் ஜொலிக்க முடியாமல் போனதற்குக் காரணம் தனது மேனேஜர் தான் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
सासू मां चूम लेंगी माथा, गिफ्ट करें मीरा वासुदेवन की 7 साड़ियां
"தன்மத்ரா படத்துக்குப் பிறகு பல பட வாய்ப்புகள் வந்தன. நான் என் மேனேஜரை ரொம்ப நம்பினேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவரை நம்பி கதை கூட கேட்காமல் சில படங்களுக்கு ஓகே சொன்னேன். அந்தப் படங்கள் மோசமாகத் தோல்வி அடைந்தன. அப்புறம் தான் என் மேனேஜர் எனக்கு வந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் மற்ற நடிகைகளுக்கு மாற்றி விட்டார் என்று தெரிந்தது" என மனம் நொந்து பேசியிருக்கிறார்.