2024 Bangladesh quota reform movement | வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான பெரிய போராட்டத்திற்கு மத்தியில் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக பெரும் வன்முறை வெடித்தது. அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கடந்த திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளிறினார்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடையக்கூடும் என்றும் லண்டனுக்குச் செல்ல இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டில் கவலரம் தொடர்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். அங்கிருக்கும் இஸ்லாமிய குழுக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை இன மக்களான இந்துக்களையும், இந்து கோவில்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
ஷேக் ஹசீனா இனி ஒருபோதும் வங்கதேசத்திற்கு திரும்பமாட்டார்- மகன் சஜீப் ஜாய்!
இந்நிலையில், இந்திய மக்களை பாதுகாப்புடன் அழைத்து வர ஏர் இந்தியா டாக்காவிற்கு சிறப்பு விமானத்தை இயக்குகிறது. ஏற்கனவே 205 பேரை டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது ஒரு விமானம். ஏர் இந்தியா விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு சவால்கள் இருந்தபோதிலும், எந்தவொரு பயணிகளும் இல்லாமல் தேசிய தலைநகரில் இருந்து புறப்பட்ட விமானத்தை மிகக் குறுகிய அறிவிப்பில் இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா தனது திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும், தேசிய தலைநகரில் இருந்து டாக்காவிற்கு தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும், புதன்கிழமை. செவ்வாயன்று, ஏர் இந்தியா தனது காலை விமானத்தை ரத்து செய்த நிலையில், ஆனால் மாலை விமானத்தை டாக்காவிற்கு இயக்கியது. விஸ்தாரா மற்றும் இண்டிகோவும் தங்கள் சேவைகளை வங்காளதேச தலைநகருக்கு திட்டமிட்டபடி இயக்கி வருகின்றன.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்.. வங்காளதேசத்தின் இடைக்கால அரசை தலைமை தாங்குவார் - முழு விவரம்!
விஸ்தாரா விமான நிறுவனம் மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. பொதுவாக, இண்டிகோ டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு தினசரி ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து தினசரி இரண்டு சேவைகளையும் இயக்குகிறது. விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகிய இரண்டும் பங்களாதேஷ் தலைநகருக்கான செவ்வாய்கிழமை விமானங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.