மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து இங்கிலாந்து CEOவின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்வாட்ச்.. என்ன நடந்தது?

By Ramya s  |  First Published Nov 9, 2023, 12:16 PM IST

இங்கிலாந்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், மாரடைப்பிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்வாட்ச் எப்படி உதவியது என்பதை பகிர்ந்துள்ளார்.


பெரியவர்கள், சிறியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே மாரடைப்பால் இளம் வயதினர் அதிகமானோர் உயிரிழப்பை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், மாரடைப்பிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்வாட்ச் எப்படி உதவியது என்பதை பகிர்ந்துள்ளார். ஹாக்கி வேல்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பால் வாபம், ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் காலை ஓடிக்கொண்டிருந்தபோது, தனது மார்பில் கடுமையான வலியை உணருந்துள்ளார். பின்னர் தனது ஸ்மார்ட்  வாட்ச மூலம் அவரின் மனைவியை தொடர்பு கொண்டதால், அவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதுகுறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பால் வாபம்  "நான் வழக்கம் போல் காலை 7 மணிக்கு ரன்னிங் சென்றேன், சுமார் ஐந்து நிமிடங்களில் எனக்கு மார்பில் பெரும் வலி ஏற்பட்டது. என் மனைவி லாராவுக்கு ஃபோன் செய்ய என் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தினேன். அதிர்ஷ்டவசமாக, நான் வீட்டில் இருந்து வெகு தூரம் செல்லவில்லை. 5 நிமிடங்களில் செல்லக்கூடிய தூரத்தில் மட்டுமே இருந்தேன். அதனால் என் மனைவி என்னை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்” என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அவரது தமனிகளில் ஒன்றில் முழு அடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையின் இருதய மையத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், பின்னர் அவரின் தமனிகளில் இருந்த அடைப்பு அகற்றப்பட்டது.. 6 நாட்கள் கரோனரி பிரிவில் இருந்தார். அதன்பின்னர் வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பால் வாபம் கூறினார். மேலும் ''நான் அதிக பருமனாக இல்லாததாலும், என்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதாலும், எனக்கு ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை என்பதால் இது சற்று அதிர்ச்சியாக இருந்தது. இது எனது குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்தார்.

குறைந்த இரத்த அழுத்தம் உயிருக்கே ஆபத்தானதா? கவனிக்க வேண்டிய 5 அறிகுறிகள் இதோ..

தனது மனைவி மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் கவனிப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி பால் வாபம் தெரிவித்தார். ''நான் பெற்ற கவனிப்பு அற்புதமானது. ஊழியர்களைப் பற்றி என்னால் அதிகம் பேச முடியாது. என்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததற்காக என் மனைவிக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனெனில் அது அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஓரிரு மணி நேரம் மிகவும் பதட்டமாக இருந்தது. உங்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு தேவைப்படும்போது, ​​ஊழியர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள் என்பதை அறிவது உறுதியளிக்கிறது. அங்கிருந்த ஊழியர்கள் மிகவும் அருமையாக இருந்தனர், அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு பெரிய நன்றியைச் சொல்ல விரும்புகிறேன்.'' என்று தெரிவித்தார்.

ஸ்மார்ட்வாட்ச்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு உயிர் மீட்பராக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, ஈசிஜி மற்றும் பலவற்றை அளவிடும் சென்சார்களைப் பயன்படுத்தி, பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் தகவல் கிடைப்பதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!