ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் COP28 உச்சிமாநாடு காலநிலை செயலுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று இந்தியா நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று Aletihad-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
துபாயில் இன்று முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை காலநிலை தொடர்பான COP 28 உச்சி மாநாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை பிரதமர் மோடி துபாய் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு இன்று மாலையே பிரதமர் டெல்லி திரும்புகிறார். வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இந்த தகவலை நேற்று மாலை தெரிவித்து இருந்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆறாவது முறையாக இந்த மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு Aletihad-க்கு பிரதமர் மோடி அளித்திருந்த பேட்டியில், ''ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மை இந்த உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறும். எரிவாயு, சர்வதேச சோலார் வசதிகளை பெறுவதில் கூட்டாண்மை என்று மேலும் உறவுகள் விரிவடையும். பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்களும் ஒருங்கிணைந்து நிற்கின்றன. மேலும் காலநிலை குறித்த உலகளாவிய செயல்பாடுகளில் எங்களது ஆளுமையை செலுத்துவதற்கான கூட்டு முயற்சிகளில் உறுதியாக இருக்கிறோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தும் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளாக, இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்சும் உருவெடுத்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பாராட்டுகிறேன்.
காலநிலை மாற்றச் செயல்பாடுகளில் இந்தியா முன்னோடியாக உள்ளது: பிரதமர் மோடி கருத்து
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் வளரும் நாடுகள் பங்களிக்கவில்லை என்று கூறமுடியாது. இன்னும் வளரும் நாடுகள் தீர்வுக்கு ஒரு பகுதியாக இருக்க தயாராக உள்ளன. அதேசமயம், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் இவற்றை சாத்தியமாக்க முடியாது. இதனால் இந்த இரண்டு விஷயங்களிலும் உலக நாடுகளின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று கேட்கிறேன். இந்தியாவும் ஐக்கிய அரபு நாடுகளும் பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தயாராக உள்ளன.
காலநிலை செயல்பாடுகள் சமத்துவம், காலநிலை சமநிலை, பகிரப்பட்ட கடமைகள் மற்றும் பகிரப்பட்ட திறன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், யாரையும் விட்டுச் செல்லாத நிலையான எதிர்காலத்தை நோக்கிய பாதையை நாம் உருவாக்க முடியும். நாடுகள் காலநிலை செயல்பாடுகளை தொடரும்போது, உலகளாவிய தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
சமீபத்திய புது தில்லி ஜி20 உச்சிமாநாட்டின் போது, உலகளவில் பில்லியன்கள் முதல் டிரில்லியன் டாலர்கள் வரையிலான முதலீடு மற்றும் காலநிலை நிதியை விரைவாகவும், கணிசமாகவும் அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதில், வலியுறுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன். வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகளை வளர்ந்த நாடுகளின் வழங்க வேண்டும். இதற்கான உறுதிமொழிகளை செயல்படுத்துவது COP28 நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் இருக்க வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நானும் எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு விவாதங்களை நடத்தி இருந்தோம். காலநிலை மாற்றத்திற்கான அழுத்தத்தில் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் தீவிரமாக ஒத்துழைத்து வருகின்றன. எனது ஜூலை பயணத்தின் போது, காலநிலை மாற்றம் குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டோம். இது இந்த நோக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் தற்போது 186 ஜிகாவாட்டாக உள்ளது, மேலும் இது 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டளவில் 50% புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறனை அடைய நாடு இலக்காகக் கொண்டுள்ளது.
கழிவுகள் அல்லது பாழடைந்த நிலங்கள் மற்றும் நதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு "பசுமைக் கடன்கள்" வழங்குவதை கிரீன் கிரட்டி திட்டம் கருதுகிறது. இத்தகைய பசுமையாக்கும் நடவடிக்கைகள் நதிப் படுகைகளை புத்துயிர் பெறவும், மண்ணை வளப்படுத்தவும், காற்றை சுத்தப்படுத்தவும், இதனால் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும் வழிவகுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.