Singapore News : சிங்கப்பூரில் தற்போது 16 வயதுள்ள ஒரு சிறுமிக்கு அவருடைய வாழ்வில் நடந்த பல விஷயங்கள், கேட்பவர் நெஞ்சை உலுக்கும் வண்ணம் அமைத்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த சிறுமி, தனது தாயார் தற்கொலை செய்துகொண்டதை நேரில் கண்டுள்ளார். தாயின் மரணத்திற்கு பிறகு, தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி, அவரிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த தந்தையின் நண்பர் ஒருவர் குடும்பத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில், கொடுமையின் உச்சமாக அந்த சிறுமிக்கு அந்த நபராலும் சுமார் ஓராண்டு காலம் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி 13 வயது முதல் அந்த சிறுமிக்கு நடந்த கொடுமைகள் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு 13 வயது இருந்த பொழுது அவருடைய தாய் அவருக்கு இருந்த சில மன நோய்கள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த தாய் தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டு இறந்ததை அந்த சிறுமி கண்ணால் கண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் அந்த தாய் இறந்த ஒரு சில மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக அந்த சிறுமியின் தந்தை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் PTSD என்ற ஒரு வகை மனநிலைக்கு தள்ளப்பட்ட அந்த சிறுமியை மீட்டு சிங்கப்பூரின் IMH எனப்படும் இன்ஸ்டியூட் ஆப் மெண்டல் ஹெல்த் நிறுவனம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கி உள்ளது. இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த சிறுமி தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு, MSF எனப்படும் மினிஸ்ட்ரி ஆப் சோஷியல் அண்ட் ஃபேமிலி டெவெலப்மென்ட் அதிகாரிகளால் அந்த தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டில் அச்சிறுவியை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சுமார் இரண்டு ஆண்டு காலம் தனது பதினைந்தாவது வயது வரை அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த அந்த சிறுமைக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நபர் பாலியல் தொல்லை கொடுக்க துவங்கியுள்ளார். சுமார் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக தினமும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் அந்த சிறுமி.
ஒருமுறை அந்த சிறுமியின் ஆடைகளை களைந்து விட்டு கண்ணாடியின் முன் அந்த சிறுமையை நிற்க வைத்து, அவர் பாலியல் பலாத்காரத்தை ஈடுபட்டதாகவும். பலமுறை அவர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது 16 வயதாகும் அந்த சிறுமி அரசின் பாதுகாப்பில் இருந்து வரும் நிலையில் அவரை தத்தெடுத்த நபர் மீதும் தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்!
கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு சுமார் 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் வருகின்ற ஜனவரி 2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக திரும்புவார் என்றும். அப்பொழுது அவருக்கான தண்டனை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.