தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தனித்தனியாக பிரிப்பு : வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 11:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தனித்தனியாக பிரிப்பு : வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

சுருக்கம்

அமெரிக்காவில் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர், 16 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த கிறிஸ்டியன் மேக்டொனால்டு - நிகோல் தம்பதியருக்‍கு கடந்த 2015-ம் ஆண்டு தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், நியூயார்க்கை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் அறிவுரையின் பேரில், இரட்டையர்களின் தலைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்‍க, ஒரு வருடத்திற்கு பிறகு இந்த இரட்டையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர், சுமார் 16 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்து எடுத்தனர். தலை பிரிக்‍கப்பட்ட நிலையில் இருந்த குழந்தைகளை பார்த்த பெற்றோர், மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர். 

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!