சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்‍கை : தூதரக அளவில் பேச்சுவார்த்தை

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 11:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்‍கை : தூதரக அளவில் பேச்சுவார்த்தை

சுருக்கம்

சிரியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சுவார்த்தை, அமெரிக்கா தலைமையில் சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் தொடங்கியது.

சிரிய அதிபர் Bashar Al Asad தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். 5 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், சிரிய அரசுக்கு ஆதரவாகவும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அண்மையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

இந்நிலையில் போரினை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நேற்று தொடங்கியது. பேச்சுவார்த்தையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் John Kerry, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் Sergei Lavrov ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஜோர்டான், துருக்கி, கத்தார், எகிப்து, ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!