"என் வீட்டுக்காரர் பேசியது தப்புத்தாங்க…." டிரம்ப் மனைவி மிலேனியா உருக்கம்

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 06:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
"என் வீட்டுக்காரர் பேசியது தப்புத்தாங்க…."  டிரம்ப் மனைவி மிலேனியா உருக்கம்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டெனால்ட் டிரம்ப் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது தவறுதான் என அவரின் மனைவி மிலேனியா டிரம்ப் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் சரிநிகர் ஆதரவு இருப்பதால் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இருவரும் காரசாரமாக விவாதங்களில் ஈடுபட்டு, ஒருவொருக்கு ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கான 2-ம் கட்ட விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று “வாஷிங்டன் போஸ்ட்” நாளேடு டிரம்ப் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டது. 

அதில் கடந்த 2005-ம் ஆண்டு ஓரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாக, ஆபாசமான முறையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி, டிரம்ப் மீதான மரியாதையை தவிடு பொடியாக்கியது. இதையடுத்து, டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பேஸ்புக் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

மேலும் குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்பின் பெண்கள் குறித்த ஆபாசப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

அதிபர் வேட்பாளர் இடத்தில் இருந்து டிரம்பை நீக்கிவிட்டு புதிய நபரை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சியின் பல எம்.பி.கள், செனட்டர்கள் டிரம்புக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், டிரம்ப் பெண்கள் குறித்து ஆபசமாக பேசியது தவறுதான் என அவரின் மனைவி மிலேனியா டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மிலேனியா டிரம்ப் அவரின் பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், “ கடந்த 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில் எனது கணவர் டொனால்ட் டிரம்ப் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது தவறுதான். அவரின் பேச்சை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகவும் தவறானது. 

அதேசமயம்,இந்த பேச்சு மட்டுமே ஒருவரை அடையாளப்படுத்தும் என்று கூறிவிடமுடியாது என்பதை நான் அறிவேன். அவருக்கு நாட்டின் அதிபராக வரும் தகுதி இருக்கிறது. அவர் பகிரங்கமாக கேட்ட மன்னிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!