நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை உள்ளே தள்ளிவிடுவேன்… இந்திய பாணியில் ஹிலாரியை மிரட்டிய டிரம்ப்

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 07:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை உள்ளே தள்ளிவிடுவேன்… இந்திய பாணியில் ஹிலாரியை மிரட்டிய டிரம்ப்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ஆட்சிக்கு வந்தால், மின்அஞ்சல் விவகாரத்தில் ஹிலாரியை சிறையில் தள்ளிவிடுவேன் என இந்திய பாணியில் மிரட்டியுள்ளார்.

பொதுவாக எதிர்க்கட்சியினரை தேர்தல் நேரத்தில் மிரட்டுவதும், அவர்கள் செய்த தவறுகளுக்கு விசாரணைக்கமிஷன் அமைப்பது, நீதிவிசாரணை அமைத்து சிறையில் தள்ளுவது இந்திய அரசியலின் அடையாளம். அதே இப்போது டிரம்ப் கையில் எடுத்து ஹிலாரியை பழிவாங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுபோல் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் ஒருவரை வெளிப்படையாக மிரட்டி, சிறையில் தள்ளுவேன் எனக்கூறுவது இதுதான் முதல்முறையாகும். டிரம்ப் தனது தனிப்பட்ட விரோதத்துக்காக ஹிலாரியை பழிவாங்க தனது அதிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது அங்குள்ள அரசியல் ஆய்வாளர்களை அதிரச் செய்துள்ளது.

அமெரிக்க தேர்தல் முறைபோன்று இந்தியாவில் இல்லை என்கிற போதிலும், எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், ஆளும் கட்சியாக மாறும் போது தங்களின் எதிர்கட்சியினர் செய்த தவறுகளுக்கும், ஊழல்களுக்கும் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது வாடிக்கையாகும்.

இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

இந்திராகாந்தி-எமர்ஜென்சி

முதலாவதாக, கடந்த 1977-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை நிலையை நீக்கிவிட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனதா கட்சி என்ற ஒரு குடையில் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது.

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், எமர்ஜென்சியை ஆட்சியை கொண்டு வந்த இந்திரா காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் பல விசாரணைக் கமிஷன்களை அமைத்தது. குறிப்பாக ஷா கமிஷன் அறிக்கை, எடுத்த நடவடிக்கையால் இந்திரா காந்தி சிறையில் தள்ளப்பட்டார்.

வி.பி.சிங்-ராஜீவ்காந்தி

2-வதாக கடந்த 1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஜன்மோர்சா கட்சியைத் தொடங்கி, அதன்பின் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். தேர்தலின்போது பிரசாரம் செய்த வி.பி.சிங் பிரதமராக வந்தால், ராஜீவ்காந்தியை போபர்ஸ் பீரங்கி ஊழலில் சிறையில் தள்ளுவேன் என்று பிரசாரம் செய்தார். 

அதேபோல பிரதமாரக வந்த வி.பி.சிங். தான் திட்டமிட்டது போலவே ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கி வாங்கியது தொடர்பாக ராஜீவ்காந்தி எதிராக நடவடிக்கை எடுத்தார். நாடாளுமன்றத்தில் போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்த அறிக்கை தாக்கல் செய்து தனது பழிவாங்கும் எண்ணத்தை தீர்த்தார்.

தி.மு.க-அதிமுக

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.கட்சிகள் தாங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபடுவது வாடிக்கையாகும். கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அவரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார்.

அதேபோல, ஜெயலலிதா 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை மேம்பால ஊழல் வழக்கில் இரவில் கைது செய்து போலீசார் அழைத்துச்சென்றனர். இரு தலைவர்களின் இந்த செயல்பாடுகள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

கெஜ்ரிவால்-தீட்சித்

அதேபோல டெல்லியில், ஷீலா தீட்சித்-கெஜ்ரிவால் மோதல்,  ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீக்சித் மீது ஊழல் தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அகாலிதளம் கட்சியின் ஓம் பிரகாஷ் சவுதாலா மீது ஊழல் வழக்கு தொடர்ந்தது. தற்போது பாரதிய ஜனதா ஆதரவோடு ஆட்சி செய்யும் அகாலிதளம், கட்சி, அதற்கு பழிவாங்கும் நோக்கில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக வத்ரா மீதும், முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா மீதும் வழக்கு தொடர்ந்தது.

ஆபத்தான போக்கு

இந்திய அரசியலில் இன்று எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் நாளை ஆளும் கட்சியாக வரலாம். அப்படி வரும் போது, பழிவாங்கும் நோக்கில், முன்னாள் ஆளும்கட்சியினருக்கு எதிராக விசாரணைக்கமிஷன், நீதிவிசாரணை ஆகியவற்றை அமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு உகந்தது அல்ல அனைவருக்கும் தெரியும்.

இந்த ஆபத்தான இந்திய அரசியல் பழக்கத்தை இப்போது அமெரிக்க  அரசியலில் டிரம்ப் ஹிலாரிக்கு எதிராக கையில் எடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!