பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு... அமெரிக்காவின் ஆலிவர் ஹர்ட், பெங்கட் ஹால்ம்ஸ்ட்ரோம் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு... அமெரிக்காவின் ஆலிவர் ஹர்ட், பெங்கட் ஹால்ம்ஸ்ட்ரோம் அறிவிப்பு

சுருக்கம்

பொருளாதாரத் துறையில் ஒப்பந்தங்கள், கோட்பாடு தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்கட் ஹால்ம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு, 

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியல், மருத்துவம், பொரளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கானநோபல் பரிசு பெற்றவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளனது. 

ஆலிவர் ஹார்ட், ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்திலும், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் எம்.ஐ.டி. கல்வி நிலையத்திலும் பணிபுரிகின்றனர். பொருளாதாரத்துறையில் ஒப்பந்தங்கள், கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பிரச்சனை இல்லாமல் ஒப்பந்தங்கள் அமைப்பது குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குரிய நபரை தேர்வு செய்யும் நடுவர் கூறும்போது, இந்த வருடத்தின் பரிசை வென்றுள்ளவர்கள் ஒப்பந்த கொள்கையினை உருவாக்கியவர்கள் என்றார். ஒப்பந்த வடிவமைட்பபில் வேறுபட்ட பல விவகாரங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு விரிவான கட்டமைப்பினை அவர்கள் உருவாக்கியதாகவும் கூறினார்.

அவற்றில், தலைமை உயர் அதிகாரிகளுக்கு சிறந்த பணியின் அடிப்படையில் சம்பளம் வழங்குதல், இன்சூரன்ஸ் பயனாளர்களுக்கான கழிவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் போன்றவையும் அடங்கம் என்றும் அதற்கான ஒப்பந்த கொள்கையை அவர்கள் இருவரும் உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!