அமெரிக்காவில் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் வாக்காளர் பட்டியலில் இணையும் வசதி அறிமுகம்!

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 02:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
அமெரிக்காவில் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் வாக்காளர் பட்டியலில் இணையும் வசதி அறிமுகம்!

சுருக்கம்

ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளும் வசதி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க இளைஞர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஏட் கவுன்சில் என்ற பொதுச் சேவை நிறுவனம், ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளும் வசதியை அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது. லாப நோக்கமற்ற நோக்கத்திலும் இளைஞர்களை வாக்களிக்க ஈர்க்கும் வகையிலும் தான் இவ்வசதியை ஏற்படுத்தியுள்ளதாக ஏட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் உரிமை நடைமுறையில் உள்ள நிலையில், அதிபர் ஒபாமா ஏற்கனவே தனது வாக்கினை பதிவு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!