ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு - லண்டன் மாடல் அழகி கைது

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 02:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு - லண்டன் மாடல் அழகி கைது

சுருக்கம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி, லண்ட மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்தின் கவர்ச்சி மாடல் கிம்பர்லி ஐ.எஸ் அமைப்பின் சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் பிரிட்டன் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்பேரில், அவரை தீவிரமாக கண்காணித்து வந்த எம்ஐ 5 மற்றும் தீவிரவாத எதிர்ப்பு போலீசார், அவரை கடந்த 7ம் தேதி கைது செய்தனா. அவரை, தனி இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ள மொடல் கிம்பர்லி ஏற்கனவே பலமுறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாடல் அழகியின் குடியிருப்பு பகுதியை சோதனையிட்ட போலீசார், எவ்வித தடயமும் இல்லாததால், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய கிம்பர்லி குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது.

ஆனால் அந்த புகைப்படம் போலியானது எனவும், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை எனவும் கிம்பர்லி தெரிவித்துள்ளார்.

இதேபேல், பிரபல பத்திரிகை ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் கிம்பர்லியின் நிர்வாண புகைப்படம் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!