இரண்டாம் உலகப் போரை விட கொடுமையான ஒன்றை உலக நாடுகள் சந்தித்து வரும் இந்நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா முழுமையாக மீண்டு விட்டதாக சந்தோஷம் அடைந்த சில நாட்களிலேயே மீண்டும் தொற்று பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. வுனான் நகரில் உதயமான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைக்கிறது. இத்தாலி, ஈரான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 32,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,77,161 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1,320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 7,391 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:
அமெரிக்காவின் கொரோனா உற்பத்தி மையமாக மாறிய நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாள்தோறும் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடகடவென உயர்ந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரை விட கொடுமையான ஒன்றை உலக நாடுகள் சந்தித்து வரும் இந்நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு, சுய தனிமைப்படுத்தல், அதிகரிக்கும் உயிரிழப்பு என அமெரிக்க மக்கள் அடுத்தடுத்து அச்சத்தில் உறைந்திருக்கும் நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.