சுமார் 3 நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது . அப்போது டோங்ஜியில் உள்ள மருத்துவமனையில் ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறி இறந்தவர்களுக்கு தலைவணங்கி மௌன அஞ்சலி செலுத்தினர் .
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்த நோயாளிகள், மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இன்று காலை துக்கம் அனுசரிக்கப்பட்டது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவில் மிகப்பெரிய மனித பேரிழப்பை ஏற்படுத்தியது , கிட்டத்தட்ட 81 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர் , 3,300 க்கும் மேற்பட்டோர் வைரசுக்கு உயிரிழந்தனர் . வைரஸ் தாக்குதலின்போது நாட்டு மக்களுக்காக சேவையாற்றி சுமார் 14 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தனர் . அதில் மிக முக்கியமானவர் வுகானைச் சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் ஆவார். மருத்துவரான இவர், வுஹானின் விசில்ப்ளோவர், என்று தற்போது அழைக்கப்படுகிறார் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் மற்றவர்களை எச்சரிக்க முயன்றதற்காக சீன அரசு அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார். வைரஸ் சீனாவை மிக மோசமாக தாக்கப் போகிறது என அனைவரையும் எச்சரித்தார் ஆனால் அரசும் அதிகாரிகளும் கேட்கவில்லை. மாறாக அவரை தண்டித்தனர் பின்னொருநாள் வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி லீயும் மரணமடைந்தார்.
லி வென்லியாங் பேச்சை சீன அரசு உதாசினப்படுத்தியதன் விளைவுதான், தற்போது உலகம் சந்தித்து வரும் இந்த பேரிழப்புக்கு காரணம் என்றால் அது மிகையல்ல. தான் செய்த தவறை எண்ணி சீனா லி மரணத்திற்குப்பின்னர் அவர் மீதான வழக்கை திரும்ப பெற்றதுடன் அவரிடம் தார்மீகமான முறையில் மன்னிப்பு கோரியது. இது சீனாவில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு சீனா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது இந்நிலையில் கொரோனா வைரசால் உயிரிழந்த நோயாளிகள், மற்றும் நாட்டுக்காக சேவையாற்றி உயிரிழந்த லி உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று காலை 10 மணிக்கு நாடு தமிழுவிய அளவில் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 3 நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது . அப்போது டோங்ஜியில் உள்ள மருத்துவமனையில் ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறி இறந்தவர்களுக்கு தலைவணங்கி மௌன அஞ்சலி செலுத்தினர் .
நாடு முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைவணங்கி மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . சீன அரசு அலுவலர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீன தூதரகங்களில் சீன கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன இந்நிலையில் வைரஸை முதன்முதலில் எச்சரித்த மருத்துவர் " லி " யின் நினைவு குறித்து பகிருந்து கொண்ட சீன மக்கள் நாங்கள் எங்கள் நாட்டின் தலை சிறந்த மருத்துவரை இழந்துவிட்டோம் , அவரை சீன அரசு முறையாக விசாரிக்காமல் தண்டித்தது , இப்போது இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது . அவரும் அவருடன் உயிர்நீத்த தியாகிகளின் ஆன்மா சொர்க்கத்தில் இளைப்பாறட்டும் என தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் அரசு அதிகாரிகள் பீஜிங் அரசங்க வளாகத்திற்கு வெளியே நின்று வெள்ளைப் பூக்களை தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.