டிக் டாக் செயலியை அமெரிக்காவுக்கு விற்க சீன நிறுவனத்திற்கு ட்ரம்ப் உத்தரவு..?

By Thiraviaraj RMFirst Published Aug 1, 2020, 10:45 AM IST
Highlights

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிப்பிட்டு டிக் டாக் செயலியை விற்குமாறு சீனாவின் பைட் டான்ஸ்’நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் டிக் டாக் செயலி தடை விதிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

இந்த நிலையில் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலி தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன செயலியான டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள், மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக்கை பொறுத்தவரை டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீதான தடையை பரிசீலித்து வருகிறோம். டிக்டாக்கிற்கு பதிலாக பரந்த அளவில் மாற்றுவழியை யோசித்து கொண்டிருக்கிறோம்’’என்றார். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிப்பிட்டு டிக் டாக் செயலியை விற்குமாறு சீனாவின் பைட் டான்ஸ்’நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக் செயலியை கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்கலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை செய்யலாம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

click me!