கைமீறிப் போன கொரோனா..!! வைரஸ் தொற்றுக்கு துடிதுடித்து இறந்த 7 வயது நாய் ..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 31, 2020, 6:25 PM IST

 மே மாதத்தில் ஒரு கால்நடை மருத்துவரிடம் " பட்டி"க்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது அதற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது 


சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் என்ற  உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது  அதே அமெரிக்காவில் நாய் ஒன்று வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது. இது விலங்கு பிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. உலக அளவில் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றன. விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனில் கொரோனாவால் பாதித்த பூனை ஒன்று அந்த வைரஸ் தொற்றில் இருந்து  மீண்டு வந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

 உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, 1 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார்  67 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு  கோடியே 9 லட்சத்து 65 ஆயிரம் பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில் இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் உலக அளவில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வைரஸ் தொற்று பட்டியலில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 46 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 22 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசில் இருந்து மீண்டுள்ளனர்.

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் ஒரு சில இடங்களில்  வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் நியூயார்க் நகரை சேர்ந்த ராபர்ட் மஹோனி  என்பவருக்கு சொந்தமான  நாய் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது. ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த அந்த நாயின் பெயர் பட்டி, அதற்கு 7 வயது எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நாய்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன, அதே ஏப்ரல் மாதம் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.  இந்நிலையில் அந்த நாய்க்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருந்தது, பின்னர் அதன் உரிமையாளர் அதை பெரிதாக கண்டுகொள்ளாததால் கடந்த சில மாதங்களாக இதே நிலை தொடர்ந்தது. பின்னர் மே மாதத்தில் ஒரு கால்நடை மருத்துவரிடம் " பட்டி"க்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது அதற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் ஜெர்மன் ஷெப்பர்ட் என கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் செய்தி வெளியானது. 

மேலும் நாயின் நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், ஜூலை 11 அன்று அது உயிரிழந்தது. நாய்க்கு ரத்தபரிசோதனை செய்ததில், நாயின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் புற்றுநோய் இருப்பது பதிவாகியுள்ளது.  இந்நிலையில் அது தொற்றுநோயால் இருந்ததா இல்லையா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுவரை அமெரிக்காவில் பல விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள் ஒரு சிங்கம், ஒரு புலி, ஆகியவை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. விலங்குகளிடமிருந்து கொரோனா பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!