சிங்கப்பூரை திடுக்கிடவைத்த வெளிநாட்டினர்.. 6000 கோடி பண மோசடி - கார் மற்றும் ஆடம்பர பொருட்கள் பறிமுதல்!

By Ansgar R  |  First Published Aug 17, 2023, 8:53 AM IST

சிங்கப்பூரில் பண மோசடிகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற குற்றங்களில், வெளிநாட்டில் செயல்படும் மோசடி கும்பல்களோடு இணைந்து செயல்பட்ட 31 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 10 வெளிநாட்டினரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 16, 2023 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சுமார் S$1 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள், ஆபரணங்கள், மதுபானம் மற்றும் மது பாட்டில்கள், பணம், சொகுசு பைகள் மற்றும் கைக்கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள், நகைகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றைக் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது.

வணிக விவகாரங்கள்த் துறை, குற்றப் புலனாய்வுத் துறை, சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மற்றும் போலீஸ் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சிங்கபயோரின் குட் கிளாஸ் பங்களாக்கள் (ஜிசிபி) மற்றும் குடியிருப்புகள் உட்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர், இதில் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

நான் ஒரு இந்துவாக மொராரி பாபுவின் ராம் கதா நிகழ்வில் கலந்து கொண்டேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பெருமிதம்!!

கைதான 10 பேரில் யாரும் சிங்கப்பூரர்கள் அல்ல என்றும், மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்த போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தாங்கள் தகவல்களைப் பெற்றதாக காவல்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

94 அசையா சொத்துக்கள் மற்றும் 50 வாகனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இவற்றின் மொத்த மதிப்பீடு சுமார் S$815 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும் 23 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள், 250க்கும் மேற்பட்ட சொகுசு பைகள் மற்றும் கைக்கடிகாரங்கள், கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் என 120க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், 270க்கும் மேற்பட்ட நகைகள், 2 தங்கக் கட்டிகள், ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

கைதான இந்த நபர்கள் குறித்த 35க்கும் மேற்பட்ட தொடர்புடைய வங்கிக் கணக்குகள், S$110 மில்லியனுக்கும் அதிகமான மொத்த நிலுவைத் தொகையை, விசாரணைக்காகவும், குற்றச் செயல்கள் என்று சந்தேகிக்கப்படுவதைத் தடுக்கவும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பலர் கம்போடியா நாட்டை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

சிங்கப்பூரில் வளர்ச்சியை பாதிக்கும் வகையில், பணமோசடி மற்றும் பிற பல குற்றங்களை செய்த அந்த 10 பேரும் நேற்று ஆகஸ்ட் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நிதிநிலைமை!- நாட்டு மக்கள் அடிப்படை விசயங்களை தெந்துகொள்வது அவசியம்! பிரதமர் லீ செயன் விளக்கம்!

click me!