சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

By SG Balan  |  First Published Sep 25, 2023, 1:07 PM IST

சிங்கப்பூரில் பாலியல் வழக்குகளில் சிக்கிய மூன்று இந்திய வம்சாவளியின் தவிர, சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் 3 பேர் பெயர்களும் இடம்பெற்றளது.


சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமையன்று வெவ்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்களில் ஒரு மருத்துவர் உட்பட மூன்று இந்திய வம்சாவளியினரும் சிக்கியுள்ளனர். சிங்கப்பூர் நீதிமன்றங்கள் பொதுவாக ஒரே மாதிரியான பல வழக்குகளை மொத்தமாக விசாரித்து நேரத்தை மிச்சப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் மருத்துவர் தீரஜ் பிரேம் கியாதானி (35), ஹர்திரன் சிங் ரந்தாவா (29) மற்றும் மெல்விந்தர் சிங் குர்மித் சிங் (31) ஆகியோர் அடங்குவர் என்று சிங்கப்பூர் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

கந்துவட்டி கொடுமை! தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கும்பல்!

இந்த மூவரைத் தவிர, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பட் முகமது அப்துல்லா, சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் வாங் ஷிதாவோ (49), ஸ்பென்சர் டான் பெங் சுவா (58) ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஸ்டார்க் மெடிக்கல் இன்னோவேஷன்ஸ் உட்பட பல நிறுவனங்களின் இயக்குநராக இருக்கும் கியாதானி, ஜூன் 25 அன்று சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில்  ஒரு பெண்ணைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நீதிமன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரது வழக்கு அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரந்தாவா 30 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.மெல்விந்தர் குர்மித் சிங் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் 2012 அல்லது 2013 இல் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல், பட் மீதும் தனி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

click me!