Singapore : பயணம் செய்யும் இடம் குறித்து தவறான தகவல் கொடுத்தார் என்றும், மேலும் தன் காரில் ஏறிய பெண்மணி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கருதியும், அந்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் கடுமையாக நடந்து கொண்டதாக சிங்கப்பூரில் உள்ள சீன நாட்டு கார் ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
"நீங்கள் இந்தியன்.. நான் சீனா.. நீங்கள் ஒரு முட்டாள்".. என்று அந்த நபர் கூறியுள்ளார், என்று 46 வயதான யூரேசிய வம்சாவளியைச் சேர்ந்த ஜனெல்லே ஹோடன் என்ற அந்த பெண், கடந்த சனிக்கிழமையன்று அந்த வண்டி ஓட்டுநர் செய்த செயல் குருத்து கூறியுள்ளார். அந்த பெண் தனது ஒன்பது வயது மகளுடன் அந்த டாக்சியில் பயணம் செய்துள்ளார். மேலும் அந்த நபர் பேசியதை வீடியோ எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி, நேற்று சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் Tada என்ற டாக்சியை முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர்கள் பாசிர் ரிஸ் ஹவுசிங் எஸ்டேட்டின் அருகே சவாரி செய்யும் போது, அங்கு வரவிருக்கும் மெட்ரோவிற்கான, எம்ஆர்டி பாதையின் கட்டுமானப் பணியின் காரணமாக சாலையின் ஒரு பகுதி தடைபட்டதால், திடீரென அண்ட் ஓட்டுநர் பின்னால் இருந்த பயணிகள் மீது கோபம்கொண்டுள்ளர்.
நாசா விஞ்ஞானிகள் சாதனை.. விண்கல் மாதிரி பூமியை வந்தடைந்தது.. குவியும் பாராட்டுக்கள் !!
அவர்கள் தவறான முகவரியை கொடுத்துள்ளன கூறி அவர்களை நோக்கி கத்த துவங்கியுள்ளார். மேலும் அவருடைய குழந்தையின் உயரம் குறித்து சில விஷயங்களை பேசி கத்திய அந்த நபர், ஒரு கட்டத்தில், நீங்கள் இந்தியர்கள்.. நான் சீனா.. நீங்கள் முட்டாள்கள் என்று கதியுள்ளார். அதற்கு அந்த பெண், நான் சிங்கப்பூரில் வசிக்கும் யுரேசிய நாட்டு பெண் என்று கூறியுள்ளார். பொதுவாக யுரேசியர்கள் இந்தியர்களை போல தோற்றம் கொண்டவர்கள் ஆவர்.
ஒருவழியாக அந்த ஓட்டுனரிடம் இருந்து விலகி சென்ற அந்த பெண், Tada நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் நான் இந்தியரா, இல்லையா என்பது முக்கியமல்ல, எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் அப்படி பேசியது தவறு என்று கூறி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். Tada நிறுவனமும், இதுபோன்ற செயல்களை நாங்கள் ஊக்குவிப்பது இல்லை, நிச்சயம் அந்த ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்கள்.