Singapore : சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி நண்பகல் அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பணியின் போது, வெடிக்காத ஒரு 100 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில், அகழாய்வுப் பணியின் போது கட்டுமான தளத்தில் வெடிக்காத, ஒரு இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 2019 ஆம் ஆண்டில், பழைய ஜூக் கிளப் அமைந்துள்ள பகுதியான ஜியாக் கிம் தெருவில் உள்ள கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரில் பயனப்டுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அப்புறப்படுத்துவது ஆபத்து
இன்று செப்டம்பர் 24 ஞாயிற்று கிழமை அன்று சிங்கப்பூர் காவல் படை (SPF) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, சிங்கப்பூரில் போர் நினைவுச்சின்னம் உள்ள இடத்திற்கு நகர்த்துவதற்கு, இந்த குண்டு பாதுகாப்பானதாக இருக்காது என்று தீர்மானிக்கப்பட்டது என்றும், எனவே, அது அந்த இடத்திலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நாசா விஞ்ஞானிகள் சாதனை.. விண்கல் மாதிரி பூமியை வந்தடைந்தது.. குவியும் பாராட்டுக்கள் !!
சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் (SAF) வெடிபொருட்களை அகற்றும் (EOD) குழுவினரால், போர் நினைவுச்சின்னத்தின் கட்டுப்பாட்டு இடத்திலேயே இந்த வெடிகுண்டை அகற்றும் பணி, வருகின்ற செப்டம்பர் 26, 2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குண்டை அப்புறப்படுத்தும்போது அதிக சத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட அகற்றல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிற வணிகர்கள் மற்றும் மக்கள், தங்கள் கட்டிடங்களை தற்காலிகமாக காலி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை மூடல்
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, கட்டுப்பாட்டு இடத்தில் அகற்றும் நாளில், போர் நினைவுச்சின்னத்தை சுற்றி 200 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படும். புக்கிட் பஞ்சாங் மேம்பாலம் (உட்லண்ட்ஸ் சாலை மற்றும் பீடிர் சாலை இடையே) மற்றும் அப்பர் புக்கிட் திமா சாலை (பெடிர் சாலை மற்றும் கேஷிவ் சாலை இடையே) செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சாலை மூடல் (Road Closure) விதிக்கப்படும்.