பாகிஸ்தான்.. 40 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் - உலக வங்கி அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

By Ansgar R  |  First Published Sep 24, 2023, 8:18 PM IST

கடந்த 1 வருடத்தில் மட்டும் 12.5 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுள்ளார் என்றும். இப்போது பாகிஸ்தானில் உள்ள கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றனர் என்று உலக வங்கி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.


பாகிஸ்தானில் வறுமை நிலையில் ஒரே வருடத்தில் 34.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், சுமார் 12.5 மில்லியன் மக்கள், ஒரு நாளைக்கு 3.65 அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 303 ரூபாய்) குறைவான வருமானத்தை பெறுகின்றனர் என்றும் உலக வாங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
 
சுமார் 95 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இப்போது வறுமையில் வாழ்கின்றனர். குறிப்பாக தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தையும், உலகிலேயே அதிக அளவில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கொண்ட நாடாகவும் மாறியுள்ளது பாகிஸ்தான் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகியுள்ளது.

மாறி மாறி குறைகூறும் இந்தியா - கனடா! அமெரிக்காவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?

Tap to resize

Latest Videos

2000 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் சராசரி தனிநபர் வளர்ச்சி விகிதம் வெறும் 1.7 சதவீதமாக இருந்ததாக உலக வங்கி கூறியது. மேலும் இது தெற்காசிய நாடுகளின் சராசரி தனிநபர் வளர்ச்சி விகிதத்தில் பாதிக்கும் குறைவானதாகும் என்றும் தெரிவித்தது. 1980களின் போது, தெற்காசியாவில் பாகிஸ்தான் தான் தனிநபர் வருமானத்தில் மிக அதிகமான நிலையை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது தெற்காசிய பிராந்தியத்தில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.

டோபியாஸ் ஹக், உலக வங்கியில் உள்ள பாகிஸ்தானுக்கான பொருளாதார வல்லுனர் கூறுகையில், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார மற்றும் மனித வளர்ச்சி நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் இந்த கட்டத்தில் முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பாக்கிஸ்தானின் பொருளாதார மாதிரி இனி வறுமையைக் குறைக்கவாய்ப்பில்லை, மேலும் மக்களின் வாழ்க்கைத் தரம், சக நாடுகளை ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்துள்ளது என்றார். 

இது பாகிஸ்தானின் முக்கியமான கொள்கை மாற்றத்திற்கான தருணமாக இருக்கலாம் என்று உலக வங்கியில் பாகிஸ்தானுக்கான இயக்குனராக செயல்பட்டு வரும் Najy Benhassine தெரிவித்தார். ஆனால் இந்த கொள்கை முடிவுகள் இராணுவம், அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் உட்பட வலுவான சில பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன, என்று அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார் Najy Benhassine.

பாக்கிஸ்தான் பணவீக்கம், மின்சார கட்டண உயர்வு, கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று கூறினார். புதிய தேர்தல் சுழற்சிக்கு முன்னதாக, அனைத்து பங்குதாரர்களின் உதவியுடன் உலக வங்கி தயாரித்த அதன் வரைவு கொள்கைக் குறிப்புகளில், புதிய தேர்தல் சுழற்சிக்கு முன்னதாக பாகிஸ்தானின் அடுத்த அரசாங்கம், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அவைகளுக்கான வரிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பாக்கிஸ்தான் தனது வரி-ஜிடிபி விகிதத்தை உடனடியாக 5 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரைக்கிறது, அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவினங்களை 2.7 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதையும் பொறுப்பான நிதிப் பாதையை நோக்கி வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் கருத்துப்படி, வருவாய்-ஜிடிபி விகிதத்தை 5 சதவிகிதம் உயர்த்துவதற்கான அவர்களின் முன்மொழிவு, ரியல் எஸ்டேட் மற்றும் அதிக மானியம் அளிக்கப்பட்ட விவசாயத் துறைகளில் வரி விலக்குகள் மற்றும் அதிகரித்த வரிச் சுமையை நீக்குவதை உள்ளடக்கியதாகும்.

தற்போது, ​​பாகிஸ்தானின் வரி வசூல் திறன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவீதமாக உள்ளது, ஆனால் உலக வங்கியின் அறிக்கையின்படி, உண்மையான விகிதம் 10.2 சதவீதத்தில் கணிசமாக பின்தங்கியுள்ளது.

ஒரே ஆள்.. 25 நிமிடத்தில் கடத்தப்பட்ட 110 கிலோ அரிய வகை புராதன சிலை - CCTV காட்சிகளை பார்த்து ஆடிப்போன போலீசார்

click me!