உலக அளவில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு தான் மீன்கள், பொதுவாக பிற அசைவ உணவுகளை விட மீன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். குறிப்பாக விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி உண்பவர்கள் அதிகள், அதே போலத்தான் சிங்கப்பூரில் ஒருவர் சுமார் 30 உயிருள்ள மீன்களை வாங்கியுள்ளார்.
சிங்கப்பூரில் லு என்ற குடும்பப்பெயர் கொண்ட 62 வயதான ஓய்வு பெற்ற நபர் ஒருவர், சீன ஊடகமான ஷின் மின் டெய்லி நியூஸிடம், அளித்த தகவலின்படி, சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு பூங்காவை கடந்து சென்றபோது, அங்கிருந்து நீர் நிலைக்கு அருகில் ஒருவர் நின்றுகொண்டு எதோ செய்துகொண்டிருப்பதை கண்டுள்ளார்.
அவர் செய்வது முற்றிலும் வித்யாசமாக இருந்த நிலையில், ஆர்வம் கொண்ட அந்த 62 வயது நபர், சற்று முன்னோக்கி சென்று அவர் என்ன செய்கின்றார் என்பதை பார்த்துள்ளார். அப்போது தான், அந்த நபர் ஒரு பெட்டியில் இருந்த உயிருள்ள சுமார் 30 மீன்களை அந்த நீர் நிலையில் விட்டுக்கொண்டிருப்பதை கண்டு குழம்பிப்போய்யுள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட விரும்பவில்லை: கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்!
என்னதான் நடந்தது?
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அன்று அதாவது கடந்த செப்டம்பர் 21ம் தேதி காலை 9 மணியளவில் பிளாக் 25, கிம் மோ லிங்க் அருகே உள்ள ஒரு கால்வாயில் தான் நடந்துள்ளது. அதற்கு முன்னதாக மீன்களை கால்வாயில் விட்ட அந்த நபர் அருகில் உள்ள ஷெங் சியோங் பல்பொருள் அங்காடிக்கு சென்று அங்கு இருந்த ஒரு மீன் கடையில் எத்தனை உயிருள்ள மீன்கள் உள்ளது என்று கேட்டுள்ளார்.
இறுதியில் சிவப்பு திலாப்பியா உட்பட 30 க்கும் மேற்பட்ட மீன்களை அந்த நபர் வாங்கியுள்ளார், அதன் விலை சுமார் S$400க்கும் அதிகமாகும், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 24,000 ரூபாய். சுமார் 30 மீன்களை அவர் வாங்கிய நிலையில் அதை எடுத்து செல்ல அங்கிருந்த ஊழியர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது. இறுதியில் அந்த மீன்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கால்வாய் அருகே சென்ற அந்த நபர் அவற்றை தண்ணீரில் விட்டுள்ளார்.
ஏன் இந்த செயல்?
மீன்களை பணம் கொடுத்து வாங்கிய நபர் புத்த மதத்தை சார்ந்தவர் என்று செய்திகளை வெளியாகியுள்ளது. உயிர்களை மீட்டு இவ்வாறு அதன் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுப்பினால், தனது கடவுளின் அருள்கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் அவர் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மனிதனின் இந்த செயல் பலரால் ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: சுட்டுக் கொன்ற சிறுமி!