பன்முகத் தன்மை கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழியின் புழக்கம் குறைந்துவிட்டதாக தனது இன்ஸ்டா வலைப் பக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழாசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போல் பன்முகத் தன்மை கொண்டது சிங்கப்பூர். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தின சிறப்பு வருடாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிதாக பொறுப்பேற்ற அதிபர் தர்மன் சண்முகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழாசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றும், தொண்மையான தமிழ் மொழி தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய தமிழாசிரியிர்கள் தொடர்ந்து உழைத்து வருவதாக தெரிவித்தார்.
தமிழாசிரியர்களின் சேவை, தமிழ்ச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி சிங்கப்பூர் நாட்டினர் அனைவருக்கும் மிக முக்கியம் என்றும், இதன் மூலம் தான் பன்முகத்தன்மை கொண்ட இந்த சமுதாயத்தைக் கட்டிக்காக்க முடியும் என்றார்.
இந்த போலி SMS வந்தா நம்பாதீங்க.. உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.. சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை..
சிங்கப்பூருக்கு மிகவும் தேவையான இன ஒருங்கிணைப்புக் கொள்கையால் ஒரே இடத்தில் அதிகமான தமிழர்கள் வசிப்பதை இங்கு காண முடிவது இல்லை. அதனால் தமிழ் மொழியின் புழக்கம் குறைந்துவிட்டதாக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மொழிக் கற்றலை இன்பமான அனுபவமாக்குவதே அதற்குத் தீர்வு என்றும் தர்மன் குறிப்பிட்டுள்ளார். பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பிடித்த வகையில் அதை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கல்வி அமைச்சகமும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும், தமிழ் மொழிக் கற்றல் மற்றும் வளர்ச்சிக் குழு மூலம் அதை சிறப்பாக செய்து வருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்தார்.