அச்சுறுத்தும் XBB.1.16 மாறுபாடு.. WHO வெளியிட்ட புதிய தகவல்.. யாருக்கு ஆபத்து..?

By Ramya s  |  First Published Apr 22, 2023, 8:15 PM IST

ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


2019-ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதுவரை உருமாறிய கொரோனா மாறுபாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்புக்கு ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மற்ற கொரோனா மாறுபாடுகளை விட, வேகமாக பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்க்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்த XBB.1.16 மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, Omicron XBB.1.16 மாறுபாடு,  இந்தியா உட்பட 33 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் XBB.1.16  மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், முந்தைய அலைகளில் இருந்ததை விட மிகக் குறைவு" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

உலக சுகாதார மையத்தின் கோவிட் தொழில்நுட்ப முன்னணி மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து பேசிய போது “ பல நாடுகளில் XBB.1.16 மாறுபாட்டின் பரவலான அதிகரிப்பை தொடர்ந்து, XBB.1.16 மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்கப்படும் மாறுபாட்டின் கீழ் வகைப்படுத்துகிறது. அதன் தீவிரத்தில் எந்த மாற்றமும் இல்லை..முழு அளவிலான நோயை ஏற்படுத்தும் என்பதால், விழிப்புடன் இருக்க" வேண்டிய அவசியம் உள்ளது.." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : இனி கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தி கொள்ளலாம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

XBB.1.16 மாறுபாடு என்றால் என்ன..?

XBB.1.16 என்பது ஒமிக்ரானின் துணை மாறுபாடாகும்.. 2 ஒமிக்ரான் வகைகளின் மறுசீரமைப்பு தான் இந்த மாறூபாடு. இது எளிதில் பரவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

XBB.1.16 மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன..?

காய்ச்சல், தொண்டை புண், உடல் வலி, தலைவலி மற்றும் வயிற்று அசௌகரியம்.

யாருக்கு ஆபத்து?

XBB.1.16 மாறுபாடு கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்காது. இருப்பினும், அடிப்படை சுகாதார நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ள நபர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் கோவிட் பாதிப்பு

இந்தியாவில் தற்போது XBB.1.16 மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.

 

இதையும் படிங்க : இந்த வெயில் காலத்தில் வேலை செய்யும்போது சோர்வாக உணர்கிறீர்களா? எனர்ஜி லெவலை அதிகரிக்க உதவும் டிப்ஸ் இதோ.

click me!