Indians Layoff in USA:அமெரி்க்காவில் 80 ஆயிரம் இந்திய ஐ.டி பொறியாளர்கள் வேலையிழந்து தவிப்பு! அடுதது என்ன?

By Pothy Raj  |  First Published Jan 23, 2023, 12:24 PM IST

அமெரிக்காவில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது அங்கு வேலையில்இருந்த இந்தியர்களையும் பாதித்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது அங்கு வேலையில்இருந்த இந்தியர்களையும் பாதித்துள்ளது.

அமெரிக்காவில் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ஐடி இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறர்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய வேலையைத் தேடிக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் ஏற்படும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்.

Latest Videos

undefined

குடியரசு தின விழா பிரமாண்ட அணிவகுப்பை நேரில் காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: 

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தகவல்தொழில்நுட்பத் துறையில் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், ட்விட்டர் நிறுவனங்களி்ல் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்த வேலையிழந்த இளைஞர்கள், ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள்.இவர்கள் அனைவரும் பெரும்பாலும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள். 

எச்-1பி விசா என்பது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு எடுப்பதாகும். அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 10ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து வருகிறது.
எல்1ஏ-எல்1பி விசா என்பது, தற்காலிகமாக நிறுவனங்களுக்குள் ஊழியர்களை மாற்றிக்கொள்ளும் விசாவாகும். 

BBC Modi Documentary:பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டரில் வெளியிடத் தடை

இதில் பெரும்பாலான இந்திய ஐடிதொழில்நுட்ப வல்லுநர்கள், எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஆயிரக்கணக்கான இந்திய ஐடி பொறியாளர்கள் வேலையிழந்துவிட்டதால் அடுத்த வேலைக்காக அலை பாய்கிறார்கள். சிலர் வேலைகிடைக்காத விரக்தியில் உள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குள் வேலைகிடைக்காவிட்டால் விசாவின் நிலையை மாற்ற வேண்டியது வரும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்.

அமேசான் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில் “ நான் 3 மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா வந்து அமேசானில் சேர்ந்தேன். இப்போது மார்ச் 20ம்தேதியுடன் நான் வேலையிலிருந்து வெளியேற உள்ளேன்.” எனத் தெரிவித்தார்

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் நிலைமை இன்னும் மோசம். வேலையிழந்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடாவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை
இப்போதுள்ள நிலையில் அமெரி்க்காவில் உள்ள ஐடி நிறுவனங்கள் எளிதாக ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன என்பதால் உறுதியற்ற சூழல் நிலவுகிறது

இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் தொழில்நுட்பவல்லுநர் கூறுகையில் “நான் எச்1பி விசாவில் அமெரிக்கா வந்து மைக்ரோசாப்டில் வேலைக்கு சேர்ந்தேன். வரும் மார்ச் 18ம் தேதி எனக்கு கடைசிநாள்.நான் கணவர் இல்லாதவர், என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறார். இப்போது திடீரென வேலையிழந்துவிட்டதால் அடுத்த வேலைக்காக காத்திருக்கிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு இது கடினமான நிலை” எனத் தெரிவித்தார்.
இதில் கொடுமை என்னவென்றால், அமெரிக்காவில் வேலையிழந்த இந்திய மென்பொருள் இளைஞர்கள் 800க்கும் அதிகமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர்.

ASER: தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் கொரோனா பரவலுக்குப்பின் மிக மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி

இதில் தங்களைப் பற்றியும், தங்கள் நிலையைப் பற்றியும்எடுத்துக் கூறி, எங்கு வேலை காலியாக இருக்கிறது,எவ்வாறு விண்ணப்பிக்கலாம், யார் தகுதியானவர்கள் என்பதைக் கூறி ஒருவருக்கொருவர் உதவி செய்து வருகிறார்கள்.

மற்றொரு வாட்ஸ் அப் குரூப்பில் எச்1பி விசா, எல்1விசா முடிந்துவிட்டாலும் எவ்வாறு அமெரிக்காவில் தொடர்ந்து தங்கலாம், வேறு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதையும் ஆலோசிக்கிறார்கள். இதற்கிடையே குடியேற்றத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றஅமெரிக்க வழக்கறிஞர்களும் இந்தியர்களுக்கு உதவி வருகிறார்கள்.

click me!