அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆண்டுதோறும் ஜன.22 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாண்டரி பூங்காவில் சீனா புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: தாலிபன் அடாவடியின் உச்சம்! ஆப்கனில் பெண் பொம்மைகளுக்கும் கட்டுப்பாடு!
undefined
அப்போது திடீரென அங்கிருந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அங்கிருந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தூப்பாக்கிச்சூடை நடத்தியவர் யார் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிலவில் கால்பதித்த ஆல்ட்ரினுக்கு 93 வயதில் 4வது திருமணம்!
இதை அடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் இதுக்குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.