நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக அந்நாட்டின் கல்வி மற்றும் போலீஸ்அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக அந்நாட்டின் கல்வி மற்றும் போலீஸ்அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் கட்சியில் மிகவும் நேரம்மையான, தகுதியான அரசியல்வாதியாக கிறிஸ் ஹிப்கின்ஸ் கருதப்படுவதால் அவர்வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
undefined
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்துவரும் ஜெசிந்தா ஆர்ட்ரென் தான் பதவிவிலகப் போவதாக கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்தார். வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டில் பொதுத்தேர்தல்நடக்க இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?
இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இடைக்காலப் பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கிறிஸ் ஹிப்கின்ஸ் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் நியூசிலாந்து நாட்டின் கோவிட் தடுப்பு பொறுப்பு அமைச்சராக கிறிஸ் ஹிப்சின்ஸ் 2 ஆண்டுகள் பதவி வகித்தார். கிறிஸ் ஹிப்சின்ஸின் சிறப்பான செயல்பாடு, கடினமான கட்டுப்பாடுகள், எல்லைகளை மூடியது, நியூசிலாந்து வருவோருக்கு கடினமான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால், நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லை. கிறிஸ் ஹிப்கின்ஸ் நடவடிக்கைகள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. இருப்பினும் கட்டுப்பாடுகளால் மக்கள் சோர்வடைகிறார்கள் எனப் புரிந்து கொண்டு பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கிறிஸ் முடிவு எடுத்தார்.
அரசியல் விமர்சகர் ஜோஸி பகானி கூறுகையில் “ கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு நல்ல அரசியல் அனுபவம் இருக்கிறது, 14 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். அரசை புத்திசாலித்தனமாகவும், மக்கள் விரும்பக்கூடியதாகவும், அதேநேரம் கடுமையாகவும், நடத்தத் தகுதியுடையவர் கிறிஸ் ஹிப்கின்ஸ்” எனத் தெரிவித்தார்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ்துறை அமைச்சராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நியமிக்கப்பட்டார். குற்றங்களைக் கையாள்வதில் அரசின் மெத்தனம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, ஹிப்கின்ஸ் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே கிறிஸ் ஹிப்கின்ஸ், கல்வித்துறை அமைச்சராகவும், பொதுச்சேவை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்புக் கோரியும் அபராதம் விதித்த போலீஸார்
சட்டத்துறை அமைச்சர் கிரி ஆலன் கூறுகையில் “கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்கு தகுதியானவர், வலிமையான பிரதமராக இருப்பார். கடந்த 6 ஆண்டுகாலத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
கிறிஸ் ஹிப்கின்ஸ் வெளிப்புற நடவடிக்கைகளில் அதிகம் ஆர்வம் உடையவர். மலையேற்றம், நீச்சல், பைக்கில் வலம் வருவது ஆகிவற்றில் அதிகம் ஆர்வம் உடையவர். விக்டோரியா பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் கிரிமினாலஜி பட்டப்படிப்பை ஹிப்கின்ஸ் முடித்துள்ளார்.
2008ம் ஆண்டு எம்பியாக வருவதற்குமுன், ஹிப்கின்ஸ், இரு கல்வித்துறை அமைச்சர்களிடம் மூத்த ஆலோசகராகவும், முன்னாள்பிரதமர் ஹெலன் கிளார்கிற்கு ஆலோசகராகவும்இருந்துள்ளார்.