UK Ppolice Fined PM Rishi Sunak :பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்புக் கோரியும் அபராதம் விதித்த போலீஸார்

By Pothy Raj  |  First Published Jan 21, 2023, 9:25 AM IST

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தமைக்காக மன்னிப்புக் கோரியும், விதிகளை மீறியதற்காக பிரிட்டன் போலீஸார் அவருக்கு 100 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.


பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தமைக்காக மன்னிப்புக் கோரியும், விதிகளை மீறியதற்காக பிரிட்டன் போலீஸார் அவருக்கு 100 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.

லான்கேஷயர் போலீஸார் இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராத நோட்டீஸ் அனுப்பி அவரை செலுத்தக் கோரியுள்ளனர். நீதிமன்றத்துக்குச் சென்றால் 500 பவுண்ட்கள் செலுத்த வேண்டியதிருக்கும், ஸ்பாட்ஃபைன் என்பதால், 100 பவுண்ட்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.103 கோடி மோசடி: ஓய்வு, சேமிப்புத் தொகை பறிபோனது

சமூகவலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோல், காரில் பின்இருக்கையில் அமர்ந்திருந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கார் நகரும்போது, சீட் பெல்ட் அணியாமல் இருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையானது.

பிரிட்டன் அரசு 100 திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான பிரச்சாரப் படத்தில் நடிப்பதற்காக ரிஷி சுனக் அந்தக் காரில் இருந்தார். ரிஷி சுனக் அமர்ந்திருந்த காருக்குப்பின்னால் அவரின் பாதுகாப்பு வாகனமும் இருந்தது.

இருப்பினும், விளம்பரப் படமாக இருந்தாலும், ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் இருந்தமைக்காக லான்கேஷயர் போலீஸார் 100 பவுண்ட்கள் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனிப்பட்ட அலுவலகத்துக்கு அபராத நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?

ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாதது குறி்த்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியவுடன், ரிஷி சுனக் மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால், அவர் மன்னிப்புக் கோரியும் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த தவறுக்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். போலீஸார் விதித்த அபராதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்த தயாராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

பிரிட்டனைப் பொறுத்தவரை 14வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் காரில் பயணிக்கும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும். ஸ்பாட் பைனாக 100 பவுண்ட்களும், நீதிமன்றம் சென்றால் 500 பவுண்ட்களும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மருத்துவக் காரணங்கள், மருத்துவர் சான்று இருந்தால் மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்படும்.
ஓட்டுநர்கள் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அவருக்கு அபராதமும், உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்படும். 2021ம் ஆண்டில் பிரிட்டனில் நடந்த விபத்துகளில் 30 சதவீத உயிரிழப்புகள் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததால் நிகழ்ந்தது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது
 

click me!