2019க்கு முன்னர் சீனாவில் கொரோனா பரவியது என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.. WHO பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 6:30 PM IST
Highlights

உலகளவில் ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் அந்த உரையாடல் இருந்தது  என கூறினார். மேலும் சீன விஞ்ஞானிகள் சீன மீது வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது 

2019 டிசம்பருக்கு முன்னர் சீனாவின் மத்திய வுஹானில் கொரோனா வைரஸ் பரவியது என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த ஒரு கூட்டாக ஆய்வில் ஈடுபட்ட உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சீன நிபுணர் குழு செவ்வாய்க்கிழமை இதை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக அளவில் வைரஸ் தொற்று கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.  இதுவரை உலகில் அளவில் 10. 69 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23.35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  7. 88 கோடி பேர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் அமெரிக்காவில் மட்டும் 2.77 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.76 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா தொற்றின் ஆரம்பகாலத்தில் கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வு கூடத்தில் இருந்து கசிந்தது என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. அதேபோல் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது, ஆனால் இதை மறுத்த சீனா கொரோனா வைரஸ் சீனாவில் உருவானது என்பதற்கோ, அல்லது  வுஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து கசிந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியது. மேலும் இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை அது எச்சரித்தது. அதேவேளையில் சரவதேச விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் எனவும், சர்வதேச நிபுணர் குழுவை சீனா தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் அமெரிக்க  உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையின் அடிப்படையில், 

WHO-குழு ஜனவரி 14 ஆம் தேதி வுஹானுக்கு வருகை தந்தது, இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, ஹுஹான் கடல் உணவு சந்தை, மற்றும் வைரஸ் தொற்று  முதன்முதலில் அறியப்பட்ட இடங்கள் மற்றும் வைரஸ் ஆராய்ச்சி நடைபெற்று வரும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உள்ளிட்ட பல முக்கிய தளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இதில் சீன நிபுணர் குழுவும் இடம்பெற்றிருந்தன.  அந்நிலையில் இரு நிபுணர் குழுவினரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீன நிபுணர் குழுவின் தலைவர் லியாங் வெனியன் கூறுகையில், 2019 க்கு முன்னர் சார்ஸ், கோவி-2  மக்களுக்கு பரவியது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.  இந்த காலகட்டத்திற்கு முன்பே நகரத்தில் வைரஸ் பரவியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறினார். WHO குழு தலைவர் பீட்டர் பென் அம்ப்ரெக்  கூறுகையில், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கசிந்தது என்ற புகாரின் அடிப்படையில் சீன விஞ்ஞானிகளுடன் விரிவாக பேசப்பட்டது,  

உலகளவில் ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் அந்த உரையாடல் இருந்தது  என கூறினார். மேலும் சீன விஞ்ஞானிகள் சீன மீது வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது என்று  தங்களிடம் கூறியதாகவும், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்து நிபுணர் குழுவினர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்திய தாகவும் அம்பெர்க் கூறினார். மொத்தத்தில் 2019 டிசம்பருக்கு முன்னர் சீனாவின் மத்திய வுஹானில் கொரோனா வைரஸ் பரவியது என்பதை தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் நுபுணர் குழு தெரிவித்துள்ளது. 

 

click me!