சீனாவைப் போலவே தில்லாலங்கடி வேலை காட்டும் ரஷ்யா.. குட்டு அம்பலமானது.. தடுப்பூசியை தூக்கியெறியும் நாடு.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 3:39 PM IST
Highlights

இதே புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனாவுக்கு அடுத்து ரஷ்யா இப்போது சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது  ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை காட்டிலும் ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. 

சீனாவை போலவே ரஷ்யாவும் வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறைத்திருப்பதாக  உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்  தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த இக்கட்டான நெருக்கடியில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நிராகரிக்க வேண்டாம் என அதை பயன்படுத்தும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக அளவில் வைரஸ் தொற்று கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.  இதுவரை உலகில் அளவில் 10. 69 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23.35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  7. 88 கோடி பேர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் அமெரிக்காவில் மட்டும் 2.77 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.76 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இதே புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனாவுக்கு அடுத்து ரஷ்யா இப்போது சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது  ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை காட்டிலும் ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதில் சந்தேகம் என்னவென்றால் ரஷ்யாவில் கோவிட் 19 ஆல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தை விட அதிகமாக இருக்கக்கூடும் என்பதுதான். ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ் டெட்  என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி,  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரஷ்யாவில் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 479 பேர் இறந்துள்ளனர் என பதிவாகி உள்ளது. ஆனால் ரஷ்ய அரசு திங்களன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இதுவரை நாட்டில் மொத்தம் 77 ஆயிரத்து 68 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் ரஷ்ய அரசின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

அதேபோல் நோய் தொற்றுக்கு எதிரான போரில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என  உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை 1 லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. ஆனால் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுக்கு பிறகு அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக செயலாற்றுவது இல்லை என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த தடுப்பூசியை  நிறுத்தி வைப்பதாக தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஜ்வேலி மக்கிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக அது செயல்படாத பட்சத்தில் அதை எடுத்துக் கொள்வதில் எந்த நன்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நிராகரிக்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தென்னாப்பிரிக்காவுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 
 

click me!