குட்டு வெளியானது. கேவலம் 100 டாலருக்காக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை. காட்டிகொடுத்த மியாகலிபா

Published : Feb 08, 2021, 01:06 PM IST
குட்டு வெளியானது. கேவலம் 100 டாலருக்காக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை. காட்டிகொடுத்த மியாகலிபா

சுருக்கம்

இதில் விஷயம் என்னவென்றால், விவசாயிகளுக்கு விழுந்துவிழுந்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை அமண்டா செர்னி மற்றும் மியாகலிப்பா ஆகிய இருவருக்கும் இடையே நடந்த ட்விட்டர் பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க நடிகை அமண்டா செர்னிக்கு, ஆபாச நடிகை மியா கலிபா 100 டாலர் பணம் வழங்கியுள்ளார். இதற்கு ஆமாண்டா செர்னி மியா கலிபா விற்கு நன்றி தெரிவித்து  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரச்சாரம் நடந்து வருவதாக மத்திய அரசு எச்சரித்து வரும் நிலையில் தற்போது இந்த ட்விட்டர் பதிவு அதை உறுதி செய்யும் வகையில் உள்ளது .இதன் மூலம், பணம் வாங்கிக் கொண்டு இந்த பிரபலங்கள் இந்தியாமீது சேற்றை வாரி இறைத்துள்ளது அம்பலமாகி உள்ளது. 

 

கடந்த  75 நாட்களுக்கும் மேலாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயி சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல வெளிநாட்டு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரச்சினை குறித்து முழுமையாக தெரியாமல் பொய் தகவலின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என மத்திய அரசு அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், முதலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.  அவரைத் தொடர்ந்து பிரபல ஆபாச நடிகை மியா கலிபா, சர்வதேச பாப் இசை பாடகி ரியான்னா, பிரபல அமெரிக்க நடிகை அமண்டா செர்னி  உள்ளிட்டோர் கருத்து பதிவிட்டனர். இதற்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது.

அதாவது விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமண்டா செர்னி, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை உலகமே கவனிக்கிறது,  பிரச்சனையை புரிந்து கொள்ள நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, மனிதநேயம் இருந்தாலேபோதும் என கூறியிருந்தார். 

இந்நிலையில் அவருக்கு எதிராக இந்திய நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர், இனிமேல் ஹாலிவுட் பக்கமே நீங்கள் தலைகாட்ட முடியாது எனவும் எச்சரித்தனர்,  விவசாயிகளுக்காக ஹலிவுட்டை தூக்கி எறியவும் தயாராக இருப்பதாகவும் அவர் பதிலளித்திருந்தார்.  அதேபோல அவரது தோழியான மியாகலிபா தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், கருத்து தெரிவித்து வருவதை கண்டிப்பதாக எச்சரித்திருந்தது. காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற ட்விட்டர்களை ஊக்குவிப்பதாகவும், இந்த டுவிட்களுக்கு பின்னணியில் அவர்கள்  இருப்பதாகவும்,  விவசாயிகள் என்ற போர்வையில் காலிஸ்தான் போராளிகள் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கத்தை முன்வைப்பதற்கான சதி இது என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. 

இதில் விஷயம் என்னவென்றால், விவசாயிகளுக்கு விழுந்துவிழுந்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை அமண்டா செர்னி மற்றும் மியாகலிப்பா ஆகிய இருவருக்கும் இடையே நடந்த ட்விட்டர் பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட அமண்டா செர்னிக்கு மியா கலிபா 100 டாலர்களை வழங்கியுள்ளார், அவர் வழங்கிய பணத்திற்காக அமண்ட செர்னி மியாகலிபாவுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை மியாகலிப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியா கலிப்பாவின் டுவிட்க்கு பதிலளித்த அமண்டா செர்னி, '' எனக்கு முதலில் பணம் கொடுத்ததற்கு நன்றி,  என் ஆப்பிள்  வாலெட் எப்படியும் காலியாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.  மியா கலிபா பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்டில் அமண்டா செர்னிக்கு,  அவர் சார்பாக 100 டாலர் வழங்கப்பட்டது தெரிகிறது. இந்த மோசடி தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு சமீக வலைதளத்தில் கண்டன பதிவுகள் வெகமாக பதிவாகி வருகிறது. சில சிறுமிகளின் டுவிட் பதிவு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு அரசாங்கத்தையே உலுக்கியுள்ளது இது எவ்வளவு பெரிய மோசமான மோசடி என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!