2,073 அடி உயரத்தில் 128 மாடிகளுடன் உலகத்தின் 4வது உயரமான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது எந்த நாட்டில் உள்ளது? சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
China world's 4th Tallest Shanghai Tower: உலக கட்டிடக்கலை நிறுவனமான ஜென்ஸ்லரால் வடிவமைக்கப்பட்ட ஷாங்காய் கோபுரம், உலகின் மூன்றாவது உயரமான கட்டடமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 632 மீட்டர் (2,000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த கட்டடம் இது சீனாவின் ஷாங்காயின் புடாங் வணிக நகரத்தில் அமைந்துள்ளது. சீனாவின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
உலகின் உயரமான கட்டடம்
உயரமான கட்டடங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட கவுன்சிலின் (CTBUH) படி, ஷாங்காய் கோபுரம் அரேபியாவின் மக்கா ராயல் கடிகார கோபுரத்தை விட 31 மீட்டர் (101.7 அடி) உயரமானது. இது இப்போது நான்காவது உயரமான கட்டமாக உள்ளது. துபாயின் புர்ஜ் கலீஃபா, 828 மீட்டர் (2,700 அடி) உயரத்தில் முதலிடத்தில் இருக்கிறது.
ஷாங்காய் டவர்
128 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டடத்தின் 84 முதல் 110 வரையிலான தளங்கள் 258 அறைகளைக் கொண்ட ஒரு சொகுசு ஹோட்டலைக் கொண்டுள்ளன, இது ஜே ஹோட்டல் ஷாங்காய் டவர் என்று அழைக்கப்படுகிறது. ஷாங்காய் ஜின் ஜியாங் இன்டர்நேஷனல் ஹோட்டல் குழுமத்திற்குச் சொந்தமானது மற்றும் இன்டர்ஸ்டேட் சீனா ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸால் இயக்கப்படுகிறது, இது ஒரு ஸ்பா, மூன்று சிறந்த உணவகங்களை வழங்குகிறது. மேலும் உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.
டெஸ்லா மீது தாக்குதல்: உள்நாட்டு பயங்கரவாதமா? கடுப்பான எலான் மஸ்க்
ஷாங்காய் கோபுரத்தைப் பற்றிய சிறப்பு அம்சங்கள்:
இடம்: லுஜியாசுய், புடாங், ஷாங்காய்
உயரம்: 632 மீட்டர் (2,073 அடி)
மாடிகள்: 128 மாடிகள்
கட்டடத்தின் நிலை: இந்த உயரமான கட்டடம் 2015 இல் கட்டி முடிக்கப்பட்டு 2016 இல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
மேலும் இது சீனாவின் மிக உயரமான கட்டடம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
பசுமைச் சான்றிதழ்: ஷாங்காய் டவர் 2015 முதல் உலகளவில் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய LEED பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட கட்டிடமாகும், இது அதன் நிலைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
வேகமான லிஃப்ட்: இந்த கட்டடத்தில் தான் உலகின் வேகமான லிஃப்ட் உள்ளது. இந்த லிப்ட் 20.5 மீ/வி (74 கிமீ/மணி அல்லது 46 மைல்) வேகத்தில் இயங்கக்க்கூடியதாகும்.
இந்த கட்டடத்தில் அலுவலகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மால்கள், ஒரு மாநாட்டு மையம், சொகுசு ஹோட்ல்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய கட்டடம் எது?
அண்மை காலமாக உலகம் முழுவதும் அதிக உயரம் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஈராக்கின் பாஸ்ராவில் 964 மீட்டர் (30,000 அடி) உயரமுள்ள வானளாவிய கட்டிடமும், லண்டனில் 309.6 மீட்டர் (1,000 அடி) உயரமுள்ள ஒரு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான கட்டிடமாக உள்ளது, இது 828 மீட்டர் (2,717 அடி) உயரம் கொண்டது. இரண்டாவது இடத்தில் கோலாலம்பூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மெர்டேகா 118 உள்ளது, இது 679 மீட்டர் (2,227 அடி) உயரத்தில் உள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? மீண்டு வருவது எப்படி?